எஸ். ராமகிருஷ்ணனின் ‘யாமம்’ நாவலில் எழுதப்பட்டிருக்கும் இரவு பற்றிய குறிப்புகள் இவை. “இரவென்னும் ரகசிய நதி நம்மைச் சுற்றி எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கிறது. இரவு என்பது கால்கள் இல்லாமல் அலையும் பூனையைப் போன்றது. அதன் அதன் தீரா வாசனை எங்கேனும் பரவி இருக்கிறது” ‘அஷேரா’ நாவலை வாசித்த கணங்களின்போது அதுவும் இரவைப்போலவே ஒரு இரகசிய நதியாக நம்மைச் சுற்றி ஓடிக்கொண்டிருப்பதை உணரக்கூடியதாக இருக்கும். சுவிற்சலாந்தின் பனிக்குளிருக்கு உறைந்து, வசந்தங்களில் குளிர்ந்து, கோடையில் தணிந்து, கொழும்பின் அழுக்கான புறநகர்ப்பகுதிகளில் புழுங்கிக் கசிந்து, ஈழத்தின் வடக்கு கிழக்கிலும் தமிழ்நாட்டின் அகதி முகாம்களிலும் பாய்ந்தோடும்போது உலர்ந்தும் பெண்களின் மடியில் மிதந்தும் அவர்களற்ற உலர் நிலங்களில் கற்பனைப் பயிர் செய்தும் இந்த நாவல் எனும் பெரு நதி ஓடிக்கொண்டேயிருந்தது. சமயத்தில் அது கால்கள் அற்ற கள்ளப்பூனை போலவும் அரைந்துகொண்டு திரிந்தது. வாசித்து முடித்து நாட்கள் பல சென்றபின்னரும் அதன் தீராவாசனை எங்கெனும் பரவிக்கொண்டேயிருந்தது. அதனாலேயே அஷேரா என்பது ஒரு இரவு. அதன் மொழியில் சொல்லப்போனால் வெளிச்சத்தின் அடியாள். ந