"இத்தகைய நிகழ்வுகளில் செய்யுந்தோறும் செயல் பெருகுகிறது. திருத்துந்தோறும் பிழை பெருகுகிறது. ஒருகட்டத்தில் செய்யாச் செயல்களும் செய்த பிழைகளும் மட்டுமே தெரியவர, அடிவயிற்றில் அனலென அச்சமும் ஆங்காரமும் மட்டுமே எஞ்சுகிறது. செயலே ஒவ்வொரு கணமும் என்றிருக்க ஏதும் செய்யாமல் இருப்பதுபோல் உள்ளம் பிரமை கொள்கிறது. விசை மிகுந்து மிகுந்து ஒரு கட்டத்தில் உளம் நொய்ந்து கண்ணீர் விடுகிறோம். நம்பிக்கையிழந்து விழுகிறோம். அந்த இருண்ட ஆழத்தில் இருந்து எழுந்து மறுகணமே எழுந்து மேலும் வெறிகொள்கிறோம். மாளா ஊசல். ஓய்வில்லா அலைக்கொந்தளிப்பு. தாளமுடியாத உணர்வாடல். ஆனால் அது நாமிருக்கும் பேரின்பநிலை என அறிய அதைக் கடந்துவந்து திரும்பி நோக்கவேண்டியிருக்கிறது."
நிகழ்வுகளில் தன்முனைப்பையும் முட்டையில் மயிர் பிடுங்குபவர்களையும் இவ்வரிகள் விமர்சிக்கின்றன. Nit picking and inability to see the holistic picture.
"நான் அவர்களை பார்த்துக்கொண்டிருந்தேன். மெய்யாகவே அவர்கள் தங்கள் சொந்த விஷயம் பற்றி மட்டுமே நினைக்கிறார்களா? இல்லை. அவர்களுக்கு இத்தனை பெரிய விழாவை மனதால் அள்ள முடியவில்லை. இந்த பெருக்கில் ஏதோ ஒன்றை பற்றிக்கொண்டு அதை மட்டுமே செய்துகொண்டிருக்கிறார்கள். வேறேதும் கண்ணுக்குப் படவில்லை."
Comments
Post a Comment