வணக்கம் நண்பர்களே,
என்னுடைய புத்தகங்களை மறுபதிப்பு செய்யவேண்டும் என்ற ஆவலை வெண்பா புத்தக நிலையத்தின் நிறுவனர் சுதர்சன் சென்ற வருடம் வெளிப்படுத்தியிருந்தார். தாமே பதிப்பகம் ஒன்றை ஆரம்பிக்கப்போவதாகவும் “கந்தசாமியும் கலக்சியும்” நாவலிலிருந்து ஆரம்பிக்கலாம் என்றும் சொன்னார். அப்படித்தொடங்கியதுதான் இந்த மூன்றாம் பதிப்புக்கான வேலைகள்.
டக்ளஸ் அடம்ஸ், டெரி பிரச்சட் போன்ற எழுத்தாளர்களின் புத்தகங்களை என் பதின்மங்களில் வாசிக்காமல் தவறவிட்டதற்காக வருந்தியிருக்கிறேன். நாளாந்த வாழ்க்கையின், அரசியலின், சமூகத்தின் அபத்தங்களை முழுக்க முழுக்க அங்கதம் கலந்து ஒரு எளிமையான அறிவியல் புனைவினூடாக வெளிப்படுத்துகின்ற எழுத்துகள் அவை. ஒருவித cognitive estrangement.
“கந்தசாமியும் கலக்சியும்” நாவலும் அப்படிப்பட்ட எழுத்துகளின் சிறு தழுவல் முயற்சிதான். ஆனால் அதன் முதலிரு பதிப்புகளும் பதின்மங்களில் இருக்கும் வாசகர்களை பெரிதாக சென்றடையவில்லை. இப்போது வெளியாகியிருக்கும் மூன்றாவது பதிப்பு அதனை நிறைவேற்றும் என்று நம்புகிறேன். வெண்பா பதிப்பகத்துக்கு நான் சொன்னதும் அதைத்தான். அதனடிப்படையில்தான் அவர்கள் அட்டைப்படத்தையும் புதிதாக வடிவமைத்திருக்கிறார்கள்.
முதன்முதலாக பதிப்புத்துறைக்குள் காலடி எடுத்து வைக்கும் வெண்பாவுக்கு வாழ்த்துகள்.
“கந்தசாமியும் கலக்சியும்” நாவல் இப்போது வெண்பா புத்தக நிலையங்களில் கிடைக்கிறது. இணையத்திலும்.
அன்பும் நன்றியும்.
Comments
Post a Comment