இ ன்னும் ஐந்து ரன்கள் அடித்தால் வெற்றி . நன்றாக இருட்டிவிட்டது . தீயிடப்பட்டு நிர்மூலம் ஆக்கப்பட்டிருந்தாலும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் யாழ் நூலகத்துக்குப் பின்னாலே சூரியன் மறைந்து கொண்டிருந்தது . எங்கே வெளிச்சம் இல்லை என்று சொல்லி ஆட்டத்தை நிறுத்தி விடுவார்களோ என்ற பயம் எங்களுக்கு . மணிக்கூண்டுக் கோபுர முனையில் இருந்து பிரபா அண்ணா பந்துவீசத் தயாராகிறார் . பூங்கா முனையில் எதிர்கொள்வது காண்டீபன் அண்ணா . மொத்த மைதானமுமே ஆர்ப்பரிக்கிறது . பந்து மட்டிங் பிட்ச்சில் லெந்தில் விழ , காண்டீபன் அண்ணா லோங் ஓனில் இழுத்து அடிக்க , விர்ர் … ரென்று பந்து பறக்கிறது . அத்தனை பேரும் ஆவென்று வாய் பிளந்து பார்க்க , அது மைதானத்தைத் தாண்டி , வீதியைத் தாண்டி , மணிக்கூண்டு கோபுரத்தின் உச்சியில் இருந்த சேவல் கொண்டையில் பட்டு .