அதிகாலை மூன்று மணி. மெல்பேர்ன் குளிர், வசந்தகாலம் ஆரம்பித்து ஜஸ்ட் ஒரு நாள் தானே! இன்னமும் கொஞ்சமும் குளிர்ந்துவிட்டு போகிறேனே என்ற அடம் பிடித்தது. ஹீட்டர் போட்டு அதன் ஆசையை கலைக்க மனம் இல்லை. சூடாக ஒரு ப்ளேன் டீ போட்டு குடித்துக்கொண்டே, ஹோம் தியேட்டரின் வொலியூமை கொஞ்சம் குறைத்துவிட்டு couch க்கு வந்து quilt ஆல் போர்த்துக்கொண்டு சாய்ந்து கிடக்க, பதினொறாவது தடவையாக மீண்டும் ப்ளே பண்ண ஆரம்பிக்கிறது, மீண்டும் மீண்டும் மீண்டும். அப்படி ஒரு இரவின் நிசப்தத்துக்கு தேவையான அளவு சத்தம். இரண்டு பேர் மட்டுமே. ஒருவர் நான். மற்றையவர் … இளையராஜா. இது “நீ தானே என் பொன் வசந்தம்” படத்து இசை விமர்சனம் கிடையாது. இசை என்பது எம்மோடு கூட வரும் ஜீவன். அதை விமர்சிக்க கூடாது. அனுபவிக்கலாம். இந்த பதிவு கடந்த ஒரு வாரமாக, குறிப்பாக கடந்த சில மணித்தியாலங்களில் இளையராஜா எனக்கேற்படுத்துகின்ற அனுபவம். பகிரவேண்டும் போன்று தோன்றியது. சில மொமென்டஸ் .. பகிர தவறினால் அப்புறம் விட்டுவிடுவோம். அனுபவி ராஜா அனுபவி! முதற்பாடல், “என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்”, ஏற்கனவே இரண்டு வரி டீசர் கொடுத்து வாரக்