Skip to main content

Posts

Showing posts with the label கட்டுரைகள்; தீண்டாய் மெய் தீண்டாய்

மாலைப் பொழுதிலொரு மேடை

பொம்பே ஜெயஸ்ரீயின் இசை நிகழ்ச்சி முடிந்து இரண்டு நாள்களாகிவிட்டன. ஆனாலும் இன்னமும் மழை நின்றும் தூறல் அடங்காத கதைதான். எந்நேரமும் அவர் பாடல்களோடே இருக்கிறேன். இதை எப்படி விவரிப்பது என்று விளங்கவில்லை. உணர்ச்சி மிகுந்த நிலையில் எழுதக்கூடாது என்று நினைத்திருந்தேன். இப்போது எழுதியாவது கடக்கலாமா என்று பார்க்கிறேன்.

சிறுவர்கள் சொல்லும் கதை

  சந்திரனின் தகப்பன் காசிப்பிள்ளையர் ஒரு கடை முதலாளி. ஞாயிற்றுக்கிழமை காசிப்பிள்ளையர் வீட்டிலே நிற்கின்ற நாளென்பதால் காலையிலேயே மொத்த வீடும் அதகளப்படத்தொடங்கிவிடும். கடை வேலையாட்கள் விடிய வெள்ளனயே வந்து தோட்டத்தில் பாத்தி மாற்றிக்கொண்டிருப்பர். ஒன்பது மணிக்கே சங்கரப்பிள்ளை ஆடு அடித்து முதற்பங்கோடு இரத்தத்தையும் வீட்டுக்கு எடுத்து வந்துவிடுவார். அழுக்கு உடுப்புகளை எடுத்துப்போகவந்த நாகம்மாக்கிழவி வீட்டு வாசலில் உட்கார்ந்து யார் கேட்கிறார்களோ இல்லையோ, ஊர்த்துலாவாரங்கள் பேசத்தொடங்கிவிடும். அன்னலிங்கத்தார் மூத்த மகளோடு மா இடிப்பதற்காக வந்துவிடுவார். கிணற்றிலே தண்ணி இறைத்து தொட்டிலில் நிரப்புவதற்கென புக்கை வந்துவிடுவார். காயப்போட்ட புழுங்கல் நெல்லை மில்லுக்கு கொண்டுபோகவென ஒருவர் வந்துநிற்பார். தேங்காய் பிடுங்க இன்னொருவர். காசிப்பிள்ளையருக்கு ஸ்பெஷல் கள்ளு கொண்டுவர வேறொருவர். கணக்குப்பிள்ளை இன்னொருபக்கம். சந்திரனும் ஞாயிற்றுக்கிழமையானால் காலையிலேயே எழுந்து கால் முகம் கழுவி தயாராக நிற்பான். ஏழரை மணியானவுடனேயே படலைக்கும் வீட்டுக்குமாய் இருப்புக்கொள்ளாமல் ஓடித்திரிவான். காரணம் சண்முகம்....

தீண்டாய் மெய் தீண்டாய் : கண்டேன் கண்டேன்

    இரண்டு நாட்களாக கோடை மழை. இன்றைக்கும் விடிந்தும் விடியாததுமாக மழைச் சிதறல்கள் கூரையில் தாளம் போட்டுக்கொண்டிருந்தன.  சுடச்சுட தேநீரும் கையுமாக யன்னலைத்திறந்தால் கூதல் முகத்தில் அறைந்தது. தோட்டத்து அகத்தியில் தனியனாக ஒரு பறவை குறண்டிக்கொண்டு தூங்கியது. இன்னொரு பறவை பறந்துவந்து மேற்கிளையில் அமர்கிறது. அது வந்தமர்ந்த அசைவில் தண்ணீர் தெறித்து கீழே இருந்த பறவையின் தூக்கம் கலைகிறது. இப்போது தூக்கம் கலைந்த பறவை மேற்கிளைக்குத் தாவுகிறது. தண்ணீர் மீண்டும் சிதறுகின்றது. இப்போது இரண்டு பறவைகளுமே செட்டை அடித்து கிளைக்குக் கிளை தாவி குரங்குச் சேட்டை புரிய ஆரம்பிக்கின்றன. அகத்தி மரமே அதிர ஆரம்பிக்கிறது.  நான்கடி தள்ளி யன்னலினூடே நானிருந்து பார்க்கிறேன் என்ற விவஸ்தையே இல்லாமல் பறவைகள் இரண்டும் காதல் செய்கின்றன.   தேநீர் சுட்டது.