ராஜா ரகுமான் சம்பவம் நடந்து இது மூன்றாவது நாள். நாற்பது ஐம்பது தடவைகளுக்கு மேல் அந்த வீடியோவைப் பார்த்தாயிற்று. இன்னமும் கெலி அடங்குவதாயில்லை. என்னைப்போன்ற, ‘யாரை உனக்கு அதிகம் பிடிக்கும்?’ என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கின்ற, இவர்களுடைய இசையை இம்மை மறுமை இல்லாமல் ரசிக்கின்ற எவருமே மிகவும் உணர்ச்சிவசப்பட்டே இந்த வீடியோவைப் பார்த்திருப்பார்கள் என்று நம்புகிறேன். அப்படியொரு அற்புதத் தருணம் இது.