Skip to main content

Posts

Showing posts with the label வெள்ளி

"வெள்ளி" நாவல் பற்றி எழுத்தாளர் லெ. முருகபூபதி

அவுஸ்திரேலியாவில் மெல்பனில் வதியும் ஜே.கே. என்ற புனைபெயரில் இலக்கியப்பிரதிகள் எழுதிவரும் ஜெயக்குமரனின் வெள்ளி ( மாயப்புனைவு ) நாவலை அண்மையில் படித்தேன். ஜே.கே. மெல்பனில்தான் வசிக்கிறார் என்பதை  அவரது எழுத்துக்களை தொடர்ந்து படித்துவரும் வாசகர்கள் நன்கு அறிவர்.  எனினும்  ஜே.கே. என்றால், அது மறைந்துவிட்ட ஜெயகாந்தனைத்தானே குறிக்கும் என்றும்,  அவுஸ்திரேலியா எங்கே இருக்கிறது ? எனவும் கேட்கும் தமிழக வாசகர்களுக்காகவும், இந்தப்பதிவின் தொடக்கத்தில் அவ்வாறு எழுதினேன்.

‘வெள்ளி’ நாவல் பற்றி ராஜா கருப்பையா

பள்ளி நாட்களில் தமிழ் செய்யுள் பாடத்தில் எந்த குறுந்தொகை பாடல் படித்தோம் என்பது நினைவில் இல்லை. வருடங்கள் பல கடந்த பின்பு 2011ம் ஆண்டில் திரு. சுஜாதா அவர்களின் ‘401 காதல் கவிதைகள், குறுந்தொகை ஓர் எளிய அறிமுகம்’ எனும் உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்த புத்தகம் வாசிக்க கிடைத்தது. திரு. சுஜாதா அவர்களின் ஆகச் சுவையான முன்னுரை குறுந்தொகை பாடல்களின் அறிமுகத்தை மட்டுமின்றி அவற்றை வாசிக்கும் ஆவலையும் தூண்டியிருந்தது. பாடல் புரியாவிட்டாலும்,பொருள் விளக்கம் அப்பாடல்களை வாசிக்க செய்கின்றது. திரு. சுஜாதா அவர்கள் தன்னுடைய முன்னுரையில் தமிழ் தாத்தா உ.வே.சா அவர்களுக்கு மிகப்பெரிய நன்றியை உரித்தாக்குகிறார். ஏனெனில் அவர் பதிப்பித்த உரை இல்லாவிட்டால் நாம் குறுந்தொகையை இழந்திருப்போம் என்கிறார்.

நாராய் நாராய்

வெள்ளி நாவல் அறிமுக நிகழ்வில் அரங்கேறிய இரண்டாவது சங்க இலக்கியப்பாடல். பிரிவுத்துயர் இல்லாத சங்க இலக்கியப் புனைவுக்கு இடமேது? வெள்ளி நாவலின் முக்கிய கட்டமொன்றில் பிரிவுத்துயருக்கான அத்தியாயமொன்று சாத்தியமானது. குறுந்தொகையில் ஏராளம் பிரிவுத்துயர் பாடல்கள் உண்டு. ஆனாலும் கடைச்சங்கப் பாடலான ‘நாராய் நாராய்’ வெள்ளியின் மனநிலைக்கு மிகவும் பொருந்திப்போனதாய் எனக்குத் தோன்றியது. இதை எழுதியது யாரென்று தெரியாததால் பாடலில் வருகின்ற சத்திமுத்த வாவியின் நிமித்தம் எழுதியவர் சத்திமுத்தப் புலவர் என அழைக்கப்படுகிறார். ஜீவிகாவும் ஸம்ரக்‌ஷணாவும் கேதாவும் இப்பாடலை எடுத்து அரங்கேற்றியதும், இயலும் இசையும் நாட்டியமும் மூன்று வகை படிமங்களை எடுத்தாண்டதும் மிக மன மகிழ்வைக் கொடுத்தது. கருத்துருவாக்கமும் நடன அமைப்பும் - ஜீவிகா விவேகானந்தன் இசையமைப்பும் பாட்டும் - ஸம்ரக்‌ஷணா பொருளும் நயப்பும் - கேதா காணொளியாக்கம் - வசந்த் நாராய் நாராய் செங்கால் நாராய் பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய் செங்கால் நாராய் நீயுநின் பெடையும் தென்றிசைக் குமரியாடி வடதிசைக்கேகுவீராயின் எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி நனைச...

நிலத்திலும் பெரிதே

வெள்ளி நாவல் அறிமுக நிகழ்வில் இடம்பெற்ற முத்தமிழ் அரங்கில் மேடையேறிய மூன்றாவதும் இறுதியுமான சங்கப்பாடல். இதைப்பற்றி நான் எழுதியே ஆகவேண்டும். குறுந்தொகையில் இடம்பெறும் இந்தக் குறிஞ்சித் திணைப் பாடலின் காட்சி இப்படி விரிகிறது. தலைவியைத் தேடி வந்திருக்கும் தலைவன் அவள் முன்னே தோன்றாது விளையாட்டுக்காக வேலியின் அப்புறமாக ஒளிந்திருக்கிறான். இதனைத் தோழி கண்டுவிட்டாள். தோழிக்குத் தலைவன்மீது கொஞ்சம் கோபம். என்னடா இவன், எப்போது பார்த்தாலும் இவளே கதியென்று அலைகிறானே, ஆனால் தலைவியைக் கைப்பிடித்து மணம் செய்து கூடி வாழவேண்டுமே என்ற சிந்தையே இவனுக்கு இல்லையே என்று அவள் பொருமுகிறாள். அதனால் அவனுக்குக் கேட்கும்வகையில் தலைவியிடம் தலைவனைப்பற்றிப் பழி சொல்கிறாள். ஆனால் அதைக்கேட்ட தலைவி வெகுண்டெழுந்துவிட்டாள். ‘என்ன பேச்சு பேசுகிறாய், நம் நட்பு எத்தனை உயர்ந்தது தெரியுமா?’ என்று தோழிக்குத் தலைவி விளிப்பாள். இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தேவகுலத்தார் பாடிய பாடல் இது. நிலத்தினும் பெரிதே, வானினு முயர்ந்தன்று நீரினு மாரள வின்றே சாரற் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே. இப்...

"வெள்ளி" நாவல் பற்றி அமல்ராஜ் பிரான்ஸிஸ்

ஒரு இலக்கியக் கிழவனுக்கும், நவீன ரோபோட்டிக் என்ஜினியரிங்கில் கொடிக்கட்டிப் பறக்கும் ஒரு மொடேர்ன் பையனுக்கும் இடையில் நடக்கும் ஒரு இரண்டு மணிநேர சம்பாசனை போல இருக்கிறது வெள்ளி. நவீன, விஞ்ஞான விருத்தியடைந்த ஒரு உலகத்திற்குள் நம்முடைய சங்க கால இலக்கியத்தையும், புராணங்களையும் மிக எளிமையாக உள்நுழைத்து, அதே இலக்கிய நயத்தையும், சுவையையும், அதே சங்க காலச் சூழலிலேயே வாசகர்களுக்குக் கொடுக்க முடியுமா என்றால், ஆமாம், முடியும் என்கிறது வெள்ளி. அதற்குத் தேவை வெறொன்றுமல்ல, ஜெகே போன்ற ஒரு எழுத்தாளர். அவ்வளவுதான். அந்தத் தளத்தில் வெள்ளி ஒரு பிரமாதமான தொடக்கப்புள்ளி. காலத்தை வைத்துப் பார்த்தால், இலக்கியத்தில் இதுவொரு hybrid நாவல். இரண்டு முனைகளை (காலங்களை) இழுத்து, ஒரேயிடத்தில் வைத்து முடிச்சிடும் வேலை. சங்க காலத்தில் நவீனமும், நவீனத்தில் சங்க காலமும் கலந்து, கலைந்து, சின்னாபின்னமாகாமல், ஒவ்வொரு காலத் தனித்துவங்களையும் அதனதன் சுவைகளோடு பரிமாறும் நேர்த்தி சூப்பராக இருக்கிறது. இவ்வாறான ஒரு கதைக்களத்தின் போட்டேன்ஷியல் ரிஸ்க் என்று பார்த்தால், சிலவேளை பச்சை இலக்கிய கிழவர்களுக்கு இது பிடிக்காமல் போகலாம். ஒரு...

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?

வெள்ளி நாவல் தயாராகிக்கொண்டிருக்கையிலேயே இவ்வகை நிகழ்வு ஒன்றை அரங்கேற்றுவது எமது கனவாக இருந்தது. நாவலில் உள்ள சங்க இலக்கியப் பாடல்களை ஒரு எளிமையான அரங்கில் பாட்டு, நடனம், நயப்புரை கோர்த்து வழங்கவேண்டும் என்பதுதான் அது. அது ஈற்றில் கைகூடியது என்னளவில் மிகப்பரவசமான தருணங்களுள் ஒன்று. நிகழ்வில் மொத்தமாக மூன்று பாடல்களை எடுத்துச் செய்தார்கள். முதலாவது பாடல் குறுந்தொகையில் உள்ள செம்புலப் பெயல் நீரனாரின் ‘யாயும் ஞாயும்’. கொல்லன் மகளாம் வெள்ளி பட்டறையில் பணி புரிந்துகொண்டிருக்கும் சமயம் அங்கு வருகின்ற கோடனோடு செய்யும் சின்னதான காதல் விளையாட்டு இது. பாடல் யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. கருத்துருவாக்கமும் நடன அமைப்பும் - ஜீவிகா விவேகானந்தன் இசையமைப்பும் பாட்டும் - ஸம்ரக்‌ஷணா பொருளும் நயப்பும் - கேதா காணொளியாக்கம் - வசந்த் https://www.youtube.com/watch?v=b5Huswf0xCI

வெள்ளி - நாவல் முன்னோட்டம்

வெள்ளி நாவலுக்கான சிறு முன்னோட்டம். காணொலி ஆக்கத்திற்குப் பங்கெடுத்த என் இனிய நண்பர்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும்.     வாசகர்கள் அனைவரும் இதனை இரசிப்பீர்கள் என நம்புகிறோம்.