Skip to main content

Posts

Showing posts with the label yarl it hub

ஊக்கி

“Yarl IT Hub” நிறுவனத்தினர் “ஊக்கி” என்கின்ற மென்பொருள் எழுதும் பயிற்சி நெறி ஒன்றுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.

Yarl Geek Challenge – Season 5

கி.பி 1600.  நெதர்லாந்து நாட்டு மிடில்பேர்க் நகரத்தில் கண்ணாடிக்கடை ஒன்றை நடத்திவருகிறார் லிப்பர்ஷி. பூதக்கண்ணாடி, பார்வைக்குறைப்பாடு உள்ளவர்கள் பயன்படுத்தும் கண்ணாடிவில்லை என்று பல்வேறுவகைக் கண்ணாடிகளும் வில்லைவகைகளும் அவருடைய கடையில் விற்பனைக்குக் கிடைக்கும். லிப்பர்ஷியின் கடையில் அவருக்குத் துணையாக ஒரு உதவியாளரும் வேலைசெய்து வருகிறார்.  ஒருநாள் லிப்பர்ஷியின் உதவியாளர், இரண்டு வில்லைகளை ஓரடி இடைவெளியில் வைத்து அவற்றினூடாக வெகுதொலைவில் இருக்கும் பொருட்களைத் தற்செயலாகப் பார்க்குஞ்சமயத்தில் அந்தச்சம்பவம் இடம்பெறுகிறது. ஆரம்பத்தில் மங்கலாகத் தெரிந்த தூரப்போருட்கள் வில்லைகளுக்கிடையேயான தூரத்தை தொடர்ந்து மாற்றிக்கொண்டிருக்கையில் ஒரு கட்டத்தில் தெளிவாகத் தெரிய ஆரம்பிகின்றன. மிக எட்டத்திலிருந்த தேவாலயம் ஒன்று அருகிலிருப்பதுபோல அவருக்குப் புலப்பட ஆரம்பிக்கிறது. உடனேயே அந்த உதவியாளர் லிப்பர்ஷியிடம் ஓடிச்சென்று தான் கண்டறிந்ததைச் சொல்லியிருக்கிறார். வெகுதொலைவில் இருக்கின்ற பொருளினை, இரண்டு வில்லைகளைக் குறிப்பிட்ட இடைவெளியில் நிறுத்தி, அவற்றினூடு பார்க்கும்போது, அது மிகவ...

ஐடியா

  இராகவன்; அறிவியலில் மிகத் தேர்ச்சியுடையவர். தொழில்நுட்பங்களையெல்லாம் கரைத்துக்குடித்தவர். ஒரு விஞ்ஞானக் கருவியையோ கணணி மென்பொருளையோ வடிவமைக்கக்கோரினால் தாமதமேயில்லாமல் செய்துகொடுப்பார். அவருடைய ஐ.கியூ அளவு நூற்றைம்பது இருநூறுவரை போகலாம். நாளுக்கு ஒன்று என்று விதம் விதமான அப்ளிகேஷன்களை வடிவமைக்கும் அளவுக்கு இராகவனுக்கு ஆற்றல் இருக்கிறது. ஒருநாளின் பதினைந்து மணித்தியாலங்களை இராகவன் ஆய்வுகூடங்களிலும் கணணித்திரை முன்னாலும் கழிக்கிறார். இவ்வளவு தகுதிகள் இருந்தாலும் இராகவனால் இந்தத் திகதிவரையிலும் உருப்படியான மக்களுக்கு பயன்படும்வண்ணம் ஒரு விடயத்தை அறிமுகப்படுத்தப்படமுடியாமல் போய்விட்டது. அவர் உருவாக்கிய எந்த மென்பொருளையும் எவரும் பயன்படுத்துவதில்லை. அவருடைய அப்ளிகேஷன்கள் அப்பிள் ஸ்டோரிலே யாராலுமே டவுன்லோட் பண்ணப்படாமல் தூங்குகின்றன. இன்றைக்கு இராகவன் ஏதோ ஒரு உப்புமா நிறுவனத்தின் உப்புமா மென்பொருளுக்காக தன்னுடைய திறமையை கழுவி ஊற்றிக்கொண்டிருக்கிறார். திறமைசாலியான இராகவனால் சமூகத்துக்குப் பயன்படக்கூடிய ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை நிகழ்த்தமுடியாமல் போனதன் காரணம் என்ன? இராகவன் என்றில்லை....

கனவு நனவாகிறது

    விக்கி மாமா விக்கி மாமா வட்டக்கச்சியிலேயே ஒரு பெரிய  பண்ணையார். அவர் வீட்டிலேயே ஒரு பெரிய பட்டி.  அங்கே இருநூறு, இருநூற்றைம்பது மாடுகள் இருக்கலாம். அதற்கு மேலும் இருக்கும். எண்ணிக்கை தெரியாது,. அவர்களுக்கும் தெரியாது. எண்ணினால் தரித்திரம் என்று எம்மையும் எண்ண விடமாட்டார்கள். நான்கரை மணிக்கே எழுந்து, பத்திருபதுபேர் சேர்ந்து பால் கறப்பார்கள். வெவ்வேறு சைஸ் பானைகளில் கறவை நடக்கும். ஆறரை, ஏழு மணி வரைக்கும் நீடிக்கும். கறந்த பாலில் தேத்தண்ணி ஊற்றி பட்டிக்கே கொண்டுவருவார்கள். தம்பிராசா அண்ணை பட்டியை அவிழ்த்துக்கொண்டு மேய்ச்சலுக்குப் போகும்வரைக்கும் பால் கறக்கப்பட்டுக்கொண்டிருக்கும். நாளுக்கு இருநூறு, முன்னூறு லீட்டர் வரைக்கும் சமயத்தில் பால் கிடைப்பதுண்டு.

Yarl Geek Challenge!

  தொழில்சார் சம்பந்தமான விஷயங்களை வெறுமனே ஒருவித அகடமிக் பாணியில் அணுகாமல், சுவாரசியமாக, ஆர்வத்தை தூண்டும் வகையாக எப்படி கொண்டு செல்லலாம்? அவற்றை வெறுமனே வேலை சார்ந்தது என்று நினைக்காமல், நித்தமும் சிந்தித்துக்கொண்டிருக்ககூடிய, விளையாட்டு இசை போன்ற எழுச்சி தரும் விஷயமாக எப்படி மாணவர்களை நினைக்கவைக்கலாம்? மாணவர்களுக்கு தொழிற்துறையில் நாளாந்தம் நடைபெறும் விஷயங்களை, அதன் செயற்பாடுகளை அந்த துறைகளில் இருந்து தொழிற்படுவர்களை கொண்டே பகிரவைக்க வேண்டும். ஆனால் அது கலந்துரையாடல் போன்று இல்லாமல் ஒரு சவாலாக இருக்கவேண்டும். பங்குபற்றும்போது ஒரு எக்சைட்மெண்ட் ... சுவாரசியம், தேடல் ஒருவித அட்டாச்மெண்ட், முடிந்து வீடு போனபின்னரும் நடந்த சம்பவங்கள் சிந்தனையில் ஓடிக்கொண்டு இருக்கவேண்டும். எப்படி செய்யலாம்? The Apprentice என்று அமெரிக்காவில் பிரபலமான டிவி சீரியல், பொதுவான வணிக, முகாமைத்துறையில் உள்ளவர்களுக்கிடையில் reality show பாணியில் போட்டிகள் வைத்து, elimination எல்லாம் வாரம் வாரம் நடைபெறும். நிறுவனங்களில் நடைபெறும் board room சந்திப்புகள், விவாதங்கள் எல்லாவற்றையுமே போட்டியில் உருவாக்கி, அதில...

நாற்பத்து இரண்டு!

  உயிரியல் வாழ்க்கை, எம்மை சுற்றி இருக்கும் பிரபஞ்சம் பற்றிய அந்த ஒரே கேள்விக்குரிய பதிலை, Answer to the Ultimate Question of Life, The Universe, and Everything ஐ கண்டுபிடிக்கவென “ஆழ்ந்த சிந்தனை” (Deep Thought) என்ற ஒரு அதிசக்தி வாய்ந்த கணணி வடிவமைக்கப்பட்டது. அது ஏழரை மில்லியன் ஆண்டுகளாய் கணக்கிட்டு சொல்லிய பதில் தான் “நாற்பத்திரண்டு”! பதிலை கண்டுபிடித்தாயிற்று. அதற்கான கேள்வி தான் என்ன? என்று கேட்டுக்கொண்டே hSenid மென்பொருள் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி( Chief Technical Officer) ஹர்ஷா சஞ்சீவா மேடையேற, Yarl IT Hub இன் இரண்டாவது சந்திப்பு 21-05-2012 அன்று யாழ் பல்கலைக்கழக நூலக அரங்கில் ஆரம்பிக்கிறது. தொழின்முறை தகவல் தொழில்நுட்ப துறையில் விழிப்புணர்வையும், படைப்பாற்றல் திறனையும் மேம்படுத்துவதன் மூலம், யாழ்ப்பாணத்தை ஒரு சிலிக்கன் வாலியாக மாற்றவேண்டும் என்ற தூரநோக்கோடு Yarl IT Hub அமைப்பு செயல்பட்டுவருகிறது. கணணிதுறையில் ஈடுபாடுள்ள மாணவர்களுக்கு அவர்களின் வினைத்திறனை அதிகரிப்பதோடு, அந்த துறையில் உள்ள சவால்களையும் எதிர்பார்ப்புகளையும் துறைசார் நிபுணர்களை கொண்டு தெரியப்படு...

“Yarl IT HUB” : யாழ்ப்பாணத்தில் ஒரு Silicon Valley

  அப்போது தான் இரண்டாம் உலக மகா யுத்தமும், அதை தொடர்ந்த பனிப்போரும் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி, நாடுகள் வழமைக்கு திரும்பிக்கொண்டு இருந்த காலம். அந்த ஊரில் ஒரு சிறுவன் இருந்தான். பத்து வயது தான். ஒரு முறை பக்கத்து தெருவில் வசிக்கும் ஒரு இலத்திரனியல் என்ஜினியர் வீட்டுக்கு செல்கிறான்.  அவருடைய வீட்டு கராஜில் ஒரு பரிசோதனை செய்கிறார்கள். கார்பன் மைக்ரோபோனை பயன்படுத்தி சத்தத்தை அம்பிளிபை பண்ணும் பரிசோதனை. என்ஜினியர் அந்த சிறுவனையும் துணைக்கு வைத்து வேலையை தொடர்கிறார். சிறுவன் அன்றிரவு அப்பாவுக்கு வந்து நடந்ததை சொல்கிறான். அவர் நம்பவில்லை. எலேக்ட்ரோனிக் அம்பிளிபயர் இல்லாமல் இதை செய்ய முடியாது என்கிறார். சிறுவன் செய்து காட்டுகிறான். அப்பா மகனை பெருமிதமாக பார்க்கிறார்.   சிறுவன் வளர்கிறான். பெற்றோருக்கு அவன் ஒரு சாதாரண பிள்ளை இல்லை என்பது தெரியவருகிறது. அவன் திறமைக்கு தோள் கொடுக்கின்றனர். அவன் தன்னுடைய பாடசாலை பிடிக்கவில்லை என்கிறான். மாற்றிக் கொடுக்கிறார்கள். அவன் இஷ்டப்படியே அவனுடைய சின்ன சின்ன ஆராய்ச்சிகளுக்கு இலத்திரனியல் பொருட்களை வாங்கி கொடுத்தனர். இப்போது அந்த பக்கத்து தெரு...