Skip to main content

Posts

Disgrace

அலுவலகத்தில் இருந்து இரண்டு நிமிட நடை தூரத்தில் ஐஞ்சு டாலர் புக் ஷாப் ஒன்று இருக்கிறது. புத்தகங்கள் எந்த வரிசைப்படியும் அடுக்காமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ராண்டமாய் கிடக்கும். “Q&A” க்கு பக்கத்தில் “Pride and Prejudice” இருக்கும். “The Art Of War” க்கு பக்கத்தில் “Mother Therasa” கிடைக்கும். ஒரு முறை அங்கே வேலை செய்யும் நடாலியாவிடம் ஏன் இப்படி ஒழுங்குபடுத்தாமல்  தாறுமாறாக அடுக்கி வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். அப்படி தேடும்போது தான் சர்ப்பரைசிங்காக ஒன்றை காண்பாய் என்றாள்.  கண்டனன் என்றேன். வெண்மேக கூட்டம்! சூரியன் மெதுவாய் நோட்டம்! வெள்ளைக்காரி வெட்கம்! கவிதையா? என்றாள் இன்றைக்கு இரண்டாவது என்றேன்! புரிந்து சிரித்தாள்! புரியாமல் விழித்தேன். Cappucino காபி favourite என்றாள்! Coffee Bean @ Five? நம்பிக்கையில் தான் அன்றைக்கும் அந்த புக் ஷாப்புக்கு போனேன். வழமையாக நான் என் டெஸ்க்கில் இருந்தே அம்மா கட்டித்தந்த  புட்டையும் தேங்காய்ப்பூ சம்பலையும் ஸ்பூனால் சாப்பிடுவேன்.  அலுவலகத்து ஆஸி நண்பர்களுக்கு கூட யாழ்ப்பாணமும் புட்டும் எவ்வளவு tight friends என்று இப்போது தெரிய

A Thousand Splendid Suns

டெல்லி விமானநிலையத்தில் வாங்கி அங்கேயே வாசிக்க தொடங்கி, மூடி வைக்க முடியாமல், சிங்கப்பூர் விமான நிலையத்தில் taxyக்கு வரிசையில் நிற்கும்போது கூட வாசித்து, டிரைவருக்கு PIE சொல்ல மறந்து, AYE நெரிசலில் திணறும்போது நானும் காபுல் சண்டையில் சிக்கி! வீடு வந்து, இரவிரவாக வாசித்து, அடுத்த நாள் வேலைக்கு லீவு போட்டு, சாப்பாடு தண்ணியில்லாமல் அதுவே கதியென்று கிடந்து, இரவு எட்டு மணிக்கு என் அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே வந்தால், அக்கா பாவமாய் பார்த்து கேட்டாள். “யாரடா அந்த பொண்ணு?” “பொண்ணு இல்ல அக்கா ….. பொண்ணுங்க! “The Kite Runner” புகழ் காலித் ஹூசைனின் “A Thousand Splendid Suns” வாசித்தால் புரியும், மரியமும் லைலாவும் உங்கள் இதயத்தின் இடது வலது என்று இடம்பிடித்து இருப்பார்கள். சம்பந்தமேயில்லாவிட்டாலும் அகிலனின் பாவை விளக்கில் வரும் தேவகியை மரியத்தோடும், கௌரியை லைலாவுடனும் மனம் ஒப்பிட்டுக்கொண்டு இருந்தது. வாசிக்கும் போது ஒரே முகங்கள் வந்துகொண்டு இருந்தன. என்ன ஒன்று ரஷீத் என்ற அரக்கனை தணிகாசலத்தோடு ஒப்பிடவேமுடியாது! ஆப்கான் கதை தான். மரியம், ஒரு பணக்கார தியேட்டர் முதலாளியின் சட்டவிர

படிச்சதென்ன பிடிச்சதென்ன? : புத்தனின் ஊரில் புத்தர்கள்!

இன்று காலை ஏதன்ஸ் நகரத்து வாலிபனின் வீட்டுக்கு போனேன். “புத்தனின் ஊரில் புத்தர்கள் ” என்று ஒரு கதை. சிறுகதை. சார் கவிஞர் என்பதால் கதை எழுதினாலும் கவிதை போல இருக்கிறது. நான் எழுதும் கவிதை கதை போல இருப்பது போல! கதையை அங்கே போய் வாசியுங்கள். கதைக்கு நான் போட்ட கமெண்டும் அவன் பதிலும் பதவில் ஏற்றப்படவேண்டியது போல தோன்றியதால் காப்பி பேஸ்ட் டீ! ஜேகே சொன்னது… //ஒரு காய்ந்து போன அரசமிலை காற்றில் நடமாடியது, மிதந்தது, ஒய்யாரமாய் ஊஞ்சலாடியது, கொஞ்சம் முன் சென்று பின் காட்டியது, சட்டென அம்பாகி நோக்கி நகர்ந்தது, வளையம் வளையமாய் சுழன்று பின் சட்டென நிலத்தில் சரண் புகுந்தது. அரசமிலைக்கு நிலம் சரணா சமாதியா ? என் கற்பனை செரியா ? // சங்ககால உவமானம் இன்றைக்கும் நின்றுபிடிக்கிறது! உங்கள் அளவுக்கு தமிழறிவு இல்லை. இருந்தாலும் சொல்கிறேன். ஒரு நல்ல கவிதையை கதையாக எழுதி அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் ஆக்கிவிட்டீர்களோ? உரைநடை கவிதை என்றும் சொல்லமாட்டேன். சிறுகதை தான். 70 களின் சிறுபத்திரிகைக்கதை. ஒரு உண்மை, எழுதுபோருளை, சிறுகதையாக்கினால், அப்பட்டமாக முகத்தில் அடிக்கும். ஏர்போர்ட்டிலும் அடிக்கும்! க

கவிதையும் வேண்டாம் கன்சிகாவும் வேண்டாம் :(

  சென்ற ஞாயிறு மெல்பேர்னில் பொங்கல் விழா.  கேஸி மன்றம் நடத்தியது. மன்றத்து தலைவர் call பண்ணினார். “ஹலோ மேகலாவா” “சாரி டீ இன்னும் வரல” “ஆ நான் அப்புறமா பேசறேன்” “கொய்யால, நீ எப்ப பேசினாலும் மேகலா இருக்கமாட்டா!!, தெரியும்டா ஒங்கள பத்தி!” “இல்ல ஒரு கவியரங்கம், மேகலா தான் கவித எழுதுவாளே அதான்” “ஓ சாரி , ஹன்சிகாவ ட்ரை பண்ணுங்களேன்” “ஓ ஓகே, ட்ரை பண்ணுறன், சாரி போர் த டிஸ்டர்பான்ஸ்” தலைவர் போனை வைத்துவிட, இந்த வாரம் யாரு கொல்லைப்புறத்து காதலி என்று ஐ ஆம் திங்கிங், போன் எகைன்! “ஜேகே .. நீயும் எழுதுவ தானே” “எழுதினான், பட் சரி வரல!” “ஆனா பதிவு சிலது நல்லா இருக்கே!” “ஓ அதுவா, அது சும்மா அள்ளுது, கொலை செய்யுது, அபாரம் என்று ஒரு சில வாரத்தைகள போட்டு எழுதுறது” “கவியரங்கத்துக்கு ஆறுபேரு தேவை. ஒரு கை குறையுது! அப்பிடியே ஒரு பதிவ கவிதையா எழுதி வாசிக்கிறயா?” “What the …  கவிதை என்றாலே நான் நாளு நாள் டாய்லட் போவேன். அவ்வளவு அலெர்ஜி” “இல்ல உன்னோட கேதா, உதயா கௌரி எல்லாம் கவிஞர்கள் தானே” “நான் எப்பவாச்சும் அவங்க கவிஞர் எண்டு சொன்னேனா?” “இல்ல, அவங்கட பதிவ பார்த்தா அப்புடித்தான் தெரியுது”

The Namesake

நண்பர் சுகத் ஒரு பதிவுக்கு ஒரு போட்டிருந்த கமெண்ட் இது. “The books are like Guru's, most of the good books will find you, you don't have to go and find them.” உண்மை தான். வாழ்க்கையில் சில புத்தகங்கள் நம்மை தேடிவரும். அப்படியே போட்டுதாக்கும். இது போல் ஒரு உறவு இனி இல்லை என்று அவை ஒன்றாக எம்மோடு கொள்ளும். இரவு பகல் பார்க்காது.  கடவுள் ஒவ்வொருவருக்கும் துணையாக ஏதாவது ஒன்றை அனுப்புவாராம். கணவனாக, மனைவியாக, சில கலைஞர்களுக்கு துணைவி கூட அமைவதுண்டு! சிலருக்கு அம்மா, சிலருக்கு அப்பா, ஒரு சிலருக்கு செய்யும் வேலை, சிலருக்கு பணம். துணை பல வகை. எனக்கு அது புத்தகமா என்று சில நேரங்களில் நினைப்பதுண்டு. அப்படியென்றால் கடவுளுக்கு நன்றி. உனக்கும் ஒரு புத்தகம் அனுப்புகிறேன் கடவுளே! என்னை அப்படி, கார்த்திக்குக்கு ஒரு ஜெஸ்ஸி போல போட்டு தாக்கியது இரண்டு நபர்கள். முதல் நபர் எண்டமூரி. அப்போது நான் பளையில் இடம்பெயர்ந்து அகதியாக இருக்கிறேன். 1995ம் ஆண்டு. பாடசாலை இல்லை. படிப்பு இல்லை. ஆனால் எண்டமூரியின் “ஒரு பறவையின் விடுதலை” இருந்தது. பளையில் இருக்கும் வரை மீண்டும் மீண்டும் வாசித்த புத்தகம். ச

ஆம்பிளைங்க டூயட்!!!

இந்த இசைத்தொடர் குசேலன் படத்தை விட ப்ளாப்! கடந்த பதிவுக்கு வெறும் நூறு ஹிட்ஸ் தான். மற்றவர்களுக்கு எழுதாதே, உனக்கு பிடிச்சத எழுது என்றான் மன்மதகுஞ்சு. இந்த வாரம் என் வாசகர் தமிழினி ஒரு ஈமெயில் அனுப்பினார். “இப்போது நீங்கள் இசைப்பதிவு எழுதுவதில்லையா? நீங்கள் முன்பு சொன்னது போல் சனி அல்லது ஞாயிறில் எழுதலாமா? ரசித்துப்படித்துக் கெற்க பலர் உள்ளோம்!!!” இந்த வாரம் என்னை கவர்ந்த ஆண்கள் இணைந்து பாடும் டூயட்கள் சில. ஸ்டார்ட் ரெடி மியுசிக்! தென்றலே தென்றலே, இதை feel பண்ணி கேட்காத ஒருவர் தானும் இருந்தால் நான் பாடல் கேட்பதையே நிறுத்திவிடுகிறேன். அருமையான பியானோ இசையுடன் ஆரம்பிக்கும் பாடல். உன்னியின் ஹம்மிங் இழையாய் தென்றலே தென்றலே என்று ஆரம்பிக்கும். தூரத்தில் நிலா, பக்கத்தில் காதலி தூங்குகிறாள். இரண்டுமே எட்டாத தூரத்தில். இரண்டும் அவனை எரிக்கிறது. ஆனாலும் தூங்க வைக்கிறான். நல்ல பாடல் உருவாக வேறு என்ன situation வேண்டும்? முதலாவது இண்டர்லூட்டில் கொஞ்சம் சறுக்கல். இசையும் காட்சியும் கவரவில்லை. சரணம் ஆரம்பிக்கும் போது ரகுமான் comes back again. இரண்டாவது இண்டர்லூட். அமிர்தம். ரக

கக்கூஸ்

  ர யிலில் இருந்து இறங்கும்போதே வயிற்றை கலக்க ஆரம்பித்துவிட்டது. அடக்க முடியவில்லை. இந்த டக்கீலா கருமத்தை இரவு அடிச்சாலே இதே பிரச்சினை தான். அவதானமாக இருந்திருக்கவேண்டும், இருக்கத்தான் டக்கீலா விடவில்லையே! காலையிலேயே ஒரு மாதிரி மார்க்கமாக தான் இருந்தது. கொஞ்சம் இஞ்சி போட்டு கோப்பி குடிச்சதால அவ்வளவு தெரியவில்லை. ஆனால் ரயில் ஜோலிமொன்ட் ஸ்டேஷன் கடக்கும் போது வயிறு கொஞ்சம் மக்கர் பண்ண தொடங்கியது. அட இதெல்லாம் நமக்கு சாதாரணம் என்று அதை பற்றியே யோசிக்காமல் பாட்டு கேட்டுக்கொண்டு வந்ததில் ஒருமாதிரி சமாளித்தாயிற்று. மெல்போர்ன் சென்ட்ரல் ஸ்டேஷனில் இறங்கும்போது புரிந்துவிட்டது. இன்றைக்கு சங்கு தான். அலுவலகத்துக்கு பதினைந்து நிமிடங்கள் நடக்கவேண்டும். இந்த வயிற்றோடு தாம் தாம் என்றும் நடக்கமுடியாது. கொஞ்சம் கவனமாக நடக்கவேண்டும். நின்று அடக்கிப்பார்த்துவிட்டு போகலாமா? வேண்டாம் யோசிக்காதே. அதைப்பற்றி யோசிப்பது தான் எமன். ஏதாவது பாட்டு. ம்ஹூம். புத்தகம். ஆ, புத்தகம் பற்றி யோசிக்கலாம். என்ன புத்தகம். “The Namesake”? சுத்தம்! இந்த நேரத்தில அந்த  புத்தகத்தை எல்லாமா யோசிப்பது? “Too Perfect” , போன வாரம் வ

என் கொல்லைபுறத்து காதலிகள்: முதல் கொழும்பு! முதல் ரயில்! முதல் பெண்!

  தேதி    : ஆகஸ்ட் 15, 1977 நேரம் : இரவு 9.00 மணி இடம்  : நுகேகொட பக்கத்துவீட்டு செனவிரத்ன உள்ளே நுழைகிறார்.  வந்த வேகத்தில் அவசரமும் படபடப்பும். கால்கள் நடுங்குகின்றன. சிங்களத்தில் சொல்லும்போதே வாய் குழறுகிறது. சந்திரா … மோடயங்கள் ஒவ்வொரு தமிழர் வீடாய் வந்துகொண்டு இருக்கிறாங்கள். எல்லா இடமும் அடியும், கொள்ளையும். நீங்க உடனடியாக இந்த இடத்தை விட்டு போய் விடுங்கள் எங்க போவம் செனவி? இங்க தானே பத்து வருஷமா இருக்கிறோம், இப்ப போகச்சொன்னா? போலீசில் போய் ஒரு என்ட்ரி போடுவோமே? ஓஐசியை எனக்கு தெரியும் நோ யூஸ், நினைத்தாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியாது. செய்வது எல்லாமே அரசாங்கத்து ஆட்கள் தான். நுகேகொட எம்பியின் மகன் தான் இந்த ஏரியா தமிழர்களை கொள்ளையடித்துக்கொண்டு வருகிறான். ஒன்று செய்யுங்கள். முக்கிய சாமான்களை கட்டுங்கள். எங்கள் வீட்டில் வைக்கலாம். பிள்ளைகள்? சொறி சந்திரா, அது எங்களுக்கு ரிஸ்க்,  என் அண்ணன் ஒரு தமிழ் குடும்பத்தை டாய்லட்டில் ஒளித்து வைத்ததை கண்டுபிடித்து விட்டார்கள். அவன் வீட்டையும் சூறையாடி விட்டார்கள். ஐ ஆம் எக்ஸ்ட்ரீம்லி சொறி சந்திரா ஐ அண்டர்ஸ்டாண்ட் செனவி, சாமான்கள