“ஜானே டோ னா, ஜானே ஜானே” என்று ஸ்ரேயா கோஷல் கொஞ்சும் போது கண்ணெல்லாம் ஒரு விதமாக சொருகி இதழ்களின் ஓரத்திலே ஒரு புன்சிரிப்பு ஒவ்வொருமுறையும் வரும்போது, மெல்பேர்ன் புகைவண்டியின் முன் இருக்கையில் இருப்பவர் ஒரு மாதிரியாக என்னைப்பார்ப்பது வழக்கம். முற்பிறப்பில் செய்த புண்ணியத்தில் என்றாவது ஒருநாள் அவள் முன்னாலே வந்து உட்கார்ந்தால் இந்த பாடலை full volume இல் வைத்து கேட்கவேண்டும். இந்த பாடலை கேட்கும் இவனை பிடிக்காத பெண்கள் இருப்பார்களா என்று தெரியவில்லை. இருந்தால் இருந்து விட்டுப்போகட்டும். யாருக்கு வேண்டும்? தமிழில் விழியிலே மணி விழியிலே நான் ஸ்ரேயா கோஷலை காதலிக்க ஆரம்பித்தது இந்த படத்தில் இருந்து தான். குரலிலே தேன் வடியும் என்பார்கள். ஆனால் தேன் எல்லாம் அத்தனை இனிப்பு கிடையாது. ச்சோ ஸ்வீட் என்று சுஜாதா சொல்லும் பெண் ஸ்ரேயா இல்லை, அவளுடைய குரல் என்று சொன்னால் ஒருவரும் நம்பப்போவதில்லை தான். சான்சே இல்லை. இளையராஜாவுக்கு நீண்ட நாட்களுக்குப்பிறகு சேப்பாக்கம் மாதிரி ஒரு பாட்டிங் பிட்ச். ஹாண்ட்சம் லுக்குடன் அமிதாப், லண்டனில் ஒரு வசந்தகாலத்து காதல் கதை. 34 வயது ...