Skip to main content

Posts

கணவன் மனைவி!

  “நிகழும் மங்களகரமான ஸ்ரீமுக வருடம், கார்த்திகை திங்கள், முதலாம் நாள்(16.11.1993)  செவ்வாய் கிழமை, வளர்பிறை …..” குமரன் கொடுத்த அழைப்பிதழை மண்ணெண்ணெய் கடை சங்கரப்பிள்ளை முதலாளி மேலோட்டமாக நோட்டம் விட்டார். தாலி கட்டு எத்தனை மணிக்கு தம்பி? பதினொன்றுக்கும் பதினொன்றரைக்கும் நடுவில.. கோயில்லையோ? இல்ல, பொம்பிள வீட்ட, கொக்குவில் .. குளப்பிட்டி சந்திக்கு கிட்ட, ஓ, இவன் காந்தன் விரும்பி இருந்த பிள்ளை என்ன? கொக்குவில் பெட்டையே? ஆர் ஆக்கள் எண்டு தெரியுமோ? இன்றைக்கு மட்டும் இது பத்தாவது தடவை. எதை கேட்க மறந்தாலும் எது சாதி என்று கேட்க யாழ்ப்பாணத்தார் மறக்க மாட்டார்கள்.  சரியா தெரிய இல்லை முதலாளி,  வானதியிண்ட தாய் புங்குடுதீவு அடி. .. அப்பர் நயினாதீவாம். ‘எங்கட’ ஆக்கள் தானாம். ஆனா தீவாரல்லோ தம்பி? சரி சரி, இந்த காலத்தில இத பாக்கேலுமே? வெளில கதைச்சாலும் சட்டம்பிமார் பங்கருக்க போட்டிடுவினம். குமரன் பதில் சொல்லவில்லை. சங்கரப்பிள்ளை மண்ணெண்ணெய் பதுக்கியதை கண்டுபிடித்து, இயக்கம் அவரை பங்கருக்குள் இரண்டு வாரம் வைத்திருந்தது. அதற்கு பின்பு முதலாளி தீவிர புலி எதிர்ப்பாளர்...

என்ர அம்மாளாச்சி!

  “மெல்பேர்ன் சென்ரல் செல்லும் அடுத்த புகையிரதம் இன்னமும் ஐந்து நிமிடத்தில் புறப்படும்"   எப்பிங் நிலையத்தில், பச்சை நிற பொத்தான் அழுத்தியபோது சொல்லியது. ஆஸ்திரேலிய வசந்தகாலம் காதில் கூசியது. ஜாக்கட்டின் ஜிப்பை இன்னும் மேலே இழுத்துவிட்டேன். ஐபாட் காதுக்குள் இளையராஜா “தென்றல் வந்து தீண்டி”னார். சற்று தூரத்தில் ஐந்து இளைஞர்கள், VB பியர் கானில் பெனால்டி கோல் போட்டுக்கொண்டு இருந்தனர். இருவர் ஆஸிக்காரராக இருக்கவேண்டும். மற்றவன் நெற்றியை பார்த்தால் கிழக்கு ஐரோப்பாவாக இருக்கலாம். மாசிடோனியனா? எனக்கு முன்னமேயே அகதியாக  வந்திருப்பான் போல. அடுத்தவன் கறுப்பன்.  ஒரு பெண்ணும் இருந்தாள். கால் ஓட்டும் leggies, குட்டை பாவாடை, மேலே பெயருக்கு பனியன் அணிந்திருந்தாள். இவர்களுக்கெல்லாம் குளிராதா? இல்லை காட்டுவதற்காக குளிரை சமாளிக்கிறார்களா? எல்லோருக்கும் பதினேழு பதினெட்டு வயசுக்குள் தான். ஒரே சிகரெட்டில் எல்லோர் மூச்சும் மாறி மாறி. அவர்களில் ஒருவன் என்னை கவனித்தான் போல இருந்தது. ஆஸி ஸ்லாங்கில் ஏதோ அவர்களுக்குள் பேசிக்கொண்டிருக்க, என்னை பற்றியோ தெரியாது. நான் பார்த்ததை கவனித்திருப்பா...

Disgrace

அலுவலகத்தில் இருந்து இரண்டு நிமிட நடை தூரத்தில் ஐஞ்சு டாலர் புக் ஷாப் ஒன்று இருக்கிறது. புத்தகங்கள் எந்த வரிசைப்படியும் அடுக்காமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ராண்டமாய் கிடக்கும். “Q&A” க்கு பக்கத்தில் “Pride and Prejudice” இருக்கும். “The Art Of War” க்கு பக்கத்தில் “Mother Therasa” கிடைக்கும். ஒரு முறை அங்கே வேலை செய்யும் நடாலியாவிடம் ஏன் இப்படி ஒழுங்குபடுத்தாமல்  தாறுமாறாக அடுக்கி வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். அப்படி தேடும்போது தான் சர்ப்பரைசிங்காக ஒன்றை காண்பாய் என்றாள்.  கண்டனன் என்றேன். வெண்மேக கூட்டம்! சூரியன் மெதுவாய் நோட்டம்! வெள்ளைக்காரி வெட்கம்! கவிதையா? என்றாள் இன்றைக்கு இரண்டாவது என்றேன்! புரிந்து சிரித்தாள்! புரியாமல் விழித்தேன். Cappucino காபி favourite என்றாள்! Coffee Bean @ Five? நம்பிக்கையில் தான் அன்றைக்கும் அந்த புக் ஷாப்புக்கு போனேன். வழமையாக நான் என் டெஸ்க்கில் இருந்தே அம்மா கட்டித்தந்த  புட்டையும் தேங்காய்ப்பூ சம்பலையும் ஸ்பூனால் சாப்பிடுவேன்.  அலுவலகத்து ஆஸி நண்பர்களுக்கு கூட யாழ்ப்பாணமும் புட்டும் எவ்வளவு tight friends ...

A Thousand Splendid Suns

டெல்லி விமானநிலையத்தில் வாங்கி அங்கேயே வாசிக்க தொடங்கி, மூடி வைக்க முடியாமல், சிங்கப்பூர் விமான நிலையத்தில் taxyக்கு வரிசையில் நிற்கும்போது கூட வாசித்து, டிரைவருக்கு PIE சொல்ல மறந்து, AYE நெரிசலில் திணறும்போது நானும் காபுல் சண்டையில் சிக்கி! வீடு வந்து, இரவிரவாக வாசித்து, அடுத்த நாள் வேலைக்கு லீவு போட்டு, சாப்பாடு தண்ணியில்லாமல் அதுவே கதியென்று கிடந்து, இரவு எட்டு மணிக்கு என் அறைக்கதவை திறந்து கொண்டு வெளியே வந்தால், அக்கா பாவமாய் பார்த்து கேட்டாள். “யாரடா அந்த பொண்ணு?” “பொண்ணு இல்ல அக்கா ….. பொண்ணுங்க! “The Kite Runner” புகழ் காலித் ஹூசைனின் “A Thousand Splendid Suns” வாசித்தால் புரியும், மரியமும் லைலாவும் உங்கள் இதயத்தின் இடது வலது என்று இடம்பிடித்து இருப்பார்கள். சம்பந்தமேயில்லாவிட்டாலும் அகிலனின் பாவை விளக்கில் வரும் தேவகியை மரியத்தோடும், கௌரியை லைலாவுடனும் மனம் ஒப்பிட்டுக்கொண்டு இருந்தது. வாசிக்கும் போது ஒரே முகங்கள் வந்துகொண்டு இருந்தன. என்ன ஒன்று ரஷீத் என்ற அரக்கனை தணிகாசலத்தோடு ஒப்பிடவேமுடியாது! ஆப்கான் கதை தான். மரியம், ஒரு பணக்கார தியேட்டர் முதலாளியின் சட்டவிர...

படிச்சதென்ன பிடிச்சதென்ன? : புத்தனின் ஊரில் புத்தர்கள்!

இன்று காலை ஏதன்ஸ் நகரத்து வாலிபனின் வீட்டுக்கு போனேன். “புத்தனின் ஊரில் புத்தர்கள் ” என்று ஒரு கதை. சிறுகதை. சார் கவிஞர் என்பதால் கதை எழுதினாலும் கவிதை போல இருக்கிறது. நான் எழுதும் கவிதை கதை போல இருப்பது போல! கதையை அங்கே போய் வாசியுங்கள். கதைக்கு நான் போட்ட கமெண்டும் அவன் பதிலும் பதவில் ஏற்றப்படவேண்டியது போல தோன்றியதால் காப்பி பேஸ்ட் டீ! ஜேகே சொன்னது… //ஒரு காய்ந்து போன அரசமிலை காற்றில் நடமாடியது, மிதந்தது, ஒய்யாரமாய் ஊஞ்சலாடியது, கொஞ்சம் முன் சென்று பின் காட்டியது, சட்டென அம்பாகி நோக்கி நகர்ந்தது, வளையம் வளையமாய் சுழன்று பின் சட்டென நிலத்தில் சரண் புகுந்தது. அரசமிலைக்கு நிலம் சரணா சமாதியா ? என் கற்பனை செரியா ? // சங்ககால உவமானம் இன்றைக்கும் நின்றுபிடிக்கிறது! உங்கள் அளவுக்கு தமிழறிவு இல்லை. இருந்தாலும் சொல்கிறேன். ஒரு நல்ல கவிதையை கதையாக எழுதி அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் ஆக்கிவிட்டீர்களோ? உரைநடை கவிதை என்றும் சொல்லமாட்டேன். சிறுகதை தான். 70 களின் சிறுபத்திரிகைக்கதை. ஒரு உண்மை, எழுதுபோருளை, சிறுகதையாக்கினால், அப்பட்டமாக முகத்தில் அடிக்கும். ஏர்போர்ட்டிலும் அடிக்கும்! க...

கவிதையும் வேண்டாம் கன்சிகாவும் வேண்டாம் :(

  சென்ற ஞாயிறு மெல்பேர்னில் பொங்கல் விழா.  கேஸி மன்றம் நடத்தியது. மன்றத்து தலைவர் call பண்ணினார். “ஹலோ மேகலாவா” “சாரி டீ இன்னும் வரல” “ஆ நான் அப்புறமா பேசறேன்” “கொய்யால, நீ எப்ப பேசினாலும் மேகலா இருக்கமாட்டா!!, தெரியும்டா ஒங்கள பத்தி!” “இல்ல ஒரு கவியரங்கம், மேகலா தான் கவித எழுதுவாளே அதான்” “ஓ சாரி , ஹன்சிகாவ ட்ரை பண்ணுங்களேன்” “ஓ ஓகே, ட்ரை பண்ணுறன், சாரி போர் த டிஸ்டர்பான்ஸ்” தலைவர் போனை வைத்துவிட, இந்த வாரம் யாரு கொல்லைப்புறத்து காதலி என்று ஐ ஆம் திங்கிங், போன் எகைன்! “ஜேகே .. நீயும் எழுதுவ தானே” “எழுதினான், பட் சரி வரல!” “ஆனா பதிவு சிலது நல்லா இருக்கே!” “ஓ அதுவா, அது சும்மா அள்ளுது, கொலை செய்யுது, அபாரம் என்று ஒரு சில வாரத்தைகள போட்டு எழுதுறது” “கவியரங்கத்துக்கு ஆறுபேரு தேவை. ஒரு கை குறையுது! அப்பிடியே ஒரு பதிவ கவிதையா எழுதி வாசிக்கிறயா?” “What the …  கவிதை என்றாலே நான் நாளு நாள் டாய்லட் போவேன். அவ்வளவு அலெர்ஜி” “இல்ல உன்னோட கேதா, உதயா கௌரி எல்லாம் கவிஞர்கள் தானே” “நான் எப்பவாச்சும் அவங்க கவிஞர் எண்டு சொன்னேனா?” “இல்ல, அவங்கட பதிவ பார்த்தா அப்புடித்த...

The Namesake

நண்பர் சுகத் ஒரு பதிவுக்கு ஒரு போட்டிருந்த கமெண்ட் இது. “The books are like Guru's, most of the good books will find you, you don't have to go and find them.” உண்மை தான். வாழ்க்கையில் சில புத்தகங்கள் நம்மை தேடிவரும். அப்படியே போட்டுதாக்கும். இது போல் ஒரு உறவு இனி இல்லை என்று அவை ஒன்றாக எம்மோடு கொள்ளும். இரவு பகல் பார்க்காது.  கடவுள் ஒவ்வொருவருக்கும் துணையாக ஏதாவது ஒன்றை அனுப்புவாராம். கணவனாக, மனைவியாக, சில கலைஞர்களுக்கு துணைவி கூட அமைவதுண்டு! சிலருக்கு அம்மா, சிலருக்கு அப்பா, ஒரு சிலருக்கு செய்யும் வேலை, சிலருக்கு பணம். துணை பல வகை. எனக்கு அது புத்தகமா என்று சில நேரங்களில் நினைப்பதுண்டு. அப்படியென்றால் கடவுளுக்கு நன்றி. உனக்கும் ஒரு புத்தகம் அனுப்புகிறேன் கடவுளே! என்னை அப்படி, கார்த்திக்குக்கு ஒரு ஜெஸ்ஸி போல போட்டு தாக்கியது இரண்டு நபர்கள். முதல் நபர் எண்டமூரி. அப்போது நான் பளையில் இடம்பெயர்ந்து அகதியாக இருக்கிறேன். 1995ம் ஆண்டு. பாடசாலை இல்லை. படிப்பு இல்லை. ஆனால் எண்டமூரியின் “ஒரு பறவையின் விடுதலை” இருந்தது. பளையில் இருக்கும் வரை மீண்டும் மீண்டும் வாசித்த புத்தகம். ச...