Skip to main content

Posts

இலையான்!

  “உணவு சங்கிலி என்பது சுற்றாடலில் உள்ள ..” அரியலிங்கம் மாஸ்டர் ஒரு வலதுகைக்காரர். இடதுகை கரும்பலகையில் விறுவிறுவென்று எழுதிக்கொண்டிருக்கும்போதே, வலது கை லோங்க்ஸ் பொக்கெட்டில் வறு வறுவென்று சொறிந்துகொண்டிருக்கும். ரிவிரச ஒபரேஷன் முடிந்த ‘கையுடன்’ கழுத்தடியில் ஜெயசிக்குறு ஒபரேஷன் ஆரம்பிக்கும். நீங்கள் மைதானம் பக்கம் உள்ள மிடில் ஸ்கூல் கழிப்பறைக்கு ஒதுங்கினால், கிழக்கேயிருந்து சரியாக நான்காவது அறையின் உள் கூரையில் “சொறியலிங்கம் ஒரு சொறி…” என்று கரித்துண்டால் எழுதப்பட்டு, மிகுதிப்பகுதி, மாஸ்டரின் யாரோ ஒரு ஆஸ்தான மாணவனால் அழிக்கப்பட்டு இருப்பதை கவனிக்கலாம். பக்கத்திலேயே முருகானந்தம் மிஸ்ஸின்… “சேர்” என்று யாரோ கூப்பிட, மாஸ்டர் திரும்பி பார்க்காமலேயே சொன்னார். “ஐஞ்சு நிமிஷம் தான் .. டக்கென்று போயிட்டு வரோணும் .. அங்கனக்க இழுபட்டு கொண்டு திரிஞ்சாய் எண்டால் இழுத்துப்போட்டு அறுப்பன்” சொல்லிக்கொண்டே தொடர்ந்து எழுத ஆரம்பித்தார். “உயிரினங்களுக்கு இடையிலான உணவுத்தொடர்பை விளக்குகிறது..” “சேர்…” இம்முறை கொஞ்சம் அழுத்தமாகவே கூப்பிட, மாஸ்டர் திரும்பிப்பார்த்தார். மூன்றாவது வரிசையில் ...

ஹைக்கூ எழுதிய கூப்பாடு!

  சிலமாதங்களுக்கு முன்னர் எழுதிய ஹைக்கூ பதிவு காட்டில் நிலாவான கதை தனிக்கதை! ஆனாலும் ஆசை யாரை விட்டது. கவிதை வடிவங்களில் ஓரளவுக்கேனும் சுமாராக எழுதுவேன் என்று நம்புவது இந்த ஹைக்கூவை தான். கேதாவின் National Geographic website இல் வந்த படத்தை பார்த்தவுடன் இதற்கு பொருத்தமான கவிதை ஒன்று எழுதவேண்டும் என்று தோன்றியது. இந்த படத்தின் மூடுக்கு வெண்பாவோ, ஐந்து வரி புதுக்கவிதையோ குழப்பிவிடும்! ஹைக்கூ தான் சரிவரும் என்று தோன்றியது. ஹைக்கூ. ஜப்பானிய கவிதை வடிவம். அதற்கென்று ஒரு வரையறை இருக்கிறது. The essence of haiku is "cutting". This is often represented by the juxtaposition of two images or ideas and a cutting word between them, a kind of verbal punctuation mark which signals the moment of separation and colours the manner in which the juxtaposed elements are related. எளிமையாக சொல்லுவதாக என்றால், இரண்டு படிமங்களை முதல் இரண்டு வரிகளிலும் சொல்லி, மூன்றாவது வரி அவற்றை தொடுக்கவேண்டும். அந்த தொடுப்பு, கவிதையை வேறு தளத்துக்கு கொண்டு செல்லவேண்டும்.  இதிலே எத்தனை சிலபல்கள்(syllables) எல்...

டொக் …டொக் …டொக்

  விசுக்கென்று அறைக்குள் நுழைந்து கதவை உள்பக்கமாக தாழ்பாள் போட்டான் நரேன். பக்கத்தில் நடுங்கியபடியே, ஓடிவந்த மூச்சிறைப்புடன் அபி. இத்தனை பதட்டத்திலும் கூட, அவளை அழகு என்று விவரிக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும் அழகு. பயத்தில் இன்னமும் சிவந்துபோய் இருந்தவளை பார்க்க நரேனுக்கு இந்த நேரத்திலும் முத்தமிடவேண்டும் போல .. “ஏன் ..ச்சே ..கதவை திறந்தால் உயிர் போய்விடும்.. இந்த இடத்தில் எதற்கு இப்பிடி ஒரு சிந்தனை?”, நரேன் அவளை அணைத்துக்கொண்டே அறையினுள்ளே வந்தான். ஒரேயொரு மேசை. மேலே ஒரு பல்ப். எரித்துக்கொண்டிருந்தது. நாங்க எங்கடா இருக்கிறம் இப்ப? உஷ் … இது .. ஆள்காட்டி விரலை அவளின் உதட்டில் வைத்து அழுத்தினான் நரேன். ஹார்ட் பீட் நூற்றி இருபது இருக்கலாம். ட்ரெட்மில்லில் ஓடும்போது, நூற்றி ஐம்பதை தாண்டினால் தான் இரத்தத்தில் இருக்கும் கொலஸ்டரோல் குறைய தொடங்குமாம். பிரவீன் சொல்லியிருக்கிறான். பிரவீன் … எங்கே போயிருப்பான்? .. தப்பியிருப்பான் அவன் .. எமக்கு முன்னாலேயே ஓடிப்போனானே. என்னத்தையாவது பேசடா … பயமா இருக்கு நரேன் பேசவில்லை. அபி பயத்தில் மூடிய கண்ணை இன்னனும் திறக்கவில்லை. நரேன் இப்போது ...

டெல்லிக்கு ராஜா!

ராஜாவுக்கு பிறந்தநாள்! வெறுமனே வாழ்த்தை facebook இல் சொல்லி கடலில் விழுந்த துளியாக்குவதில்(அடடா இது வைரமுத்து கற்பனை ஆச்சே, ராஜா கோபிக்கப்போகிறார்) இஷ்டமில்லை. பதின்மத்து வயதில் ராஜா என்று ஏற்கனவே எழுதியாகிவிட்டது. புதிதாக எதை சொல்லப்போகிறோம் என்று யோசித்தபோது ராஜா ஹிந்தியில் கோலோச்சிய பாடல்களை எடுத்துவிடலாம் என்ற ஒரு யோசனை. ஆனால் ஒன்று, எந்த ஒரு புதுப்பாட்டையும் முதன் முதலில் கேட்கும்போது ஒட்டாமல் தான் இருக்கும். கேட்க கேட்க உயிரை எடுக்கும். அந்த தேடலை ரசிகன் தான் செய்யவேண்டும். அதனால் இன்றைக்கு நீங்கள் ஏற்கனவே கேட்ட, உயிரை எடுத்த, எடுத்துக்கொண்டு இருக்கின்ற ராஜா பாடல்களை ஹிந்தியில் தருகிறேன். வெறும் மொழிமாற்றம் இல்லாமல் arrangements இல் மாற்றம் காட்டியிருக்கும் பாடல்கள். சில ஹிந்தியில் இருந்து தமிழுக்கு வந்தவை. பல இங்கேயிருந்து ஹிந்தி போனவை. “Aur Ek Prem Kahani” என்று ஒரு படம். கமல் நடித்த கன்னட சூப்பர் ஹிட்டான “கோகிலா” ரீமேக். பாலுமகேந்திரா படம். புதுசாக போடாமல் தன் பழைய ஹிட் மெட்டுகளை பாவித்து வெளியிட, இசை .. இசையை புரிந்தவர்களால் கொண்டாடப்பட்டது. படத்தின் வணிக வெற்றியை ...

வாரணம் மூன்று!

  முற்குறிப்பு : இது 13-05-2012 ஆஸ்திரேலிய எழுத்தாளர் விழாவில் “புலம்பெயர் படைப்புகள் தமிழுக்கு வளம் செர்க்கின்றவனா” என்ற கருத்தரங்கில் வலையுலகம்(blogs) சார்பில் என்னுடைய உரை! எல்லோருக்கும் வணக்கம்! தமிழை இப்படியும் ரசிக்கலாம் என்று கற்றுத்தந்த எழுத்தாளர் சுஜாதாவுக்கும், கம்பவாரிதி இ.ஜெயராஜுக்கும் மானசீக வணக்கங்கள். காலை ஆறு மணி! தலையில் துவாய், கருத்தரங்கு தமிழில் துவாலை என்று சொல்லலாமா?  யாழ்ப்பாணத்து பனியோடு முட்டி மோதி ஊமல் கரியில் பல் துலக்கி, கரண்டு போன மின்கம்பம் பிடுங்கிய பீங்கானில் கிணற்று கப்பி. டயர் வாரில் தேடா வலயம் ஆழக்கிணற்றில் வாரும்போது அரைவாசி  தண்ணீர் ஓட்டை வாளியால் ஓடிவிடும். முகம் கழுவி சைக்கிள் எடுத்து சந்திக்கடையில் உதயனும் ஈழநாதமும், புதன்கிழமை என்றால் ஞாயிறு வீரகேசரியும்! அப்பாவுக்கு ஒன்று எனக்கொன்று வாசிப்பதில் தொடங்கும் அனுபவம்! பாடசாலை இடை வேளை, பரியோவான் நூலகத்தில் மகாபாரத சித்திரக்கதைகள்! அஞ்சாதவாசம் முடிகையில் மணியடிக்கும் வகுப்பில் இருப்புக்கொள்ளாத தவிப்பு. அது முடிந்த பின்னும் நூலகம் தாமதமாய் வீடு போனமைக்கு அம்மாவின் திட்டு திருட்டுத்...

நாற்பத்து இரண்டு!

  உயிரியல் வாழ்க்கை, எம்மை சுற்றி இருக்கும் பிரபஞ்சம் பற்றிய அந்த ஒரே கேள்விக்குரிய பதிலை, Answer to the Ultimate Question of Life, The Universe, and Everything ஐ கண்டுபிடிக்கவென “ஆழ்ந்த சிந்தனை” (Deep Thought) என்ற ஒரு அதிசக்தி வாய்ந்த கணணி வடிவமைக்கப்பட்டது. அது ஏழரை மில்லியன் ஆண்டுகளாய் கணக்கிட்டு சொல்லிய பதில் தான் “நாற்பத்திரண்டு”! பதிலை கண்டுபிடித்தாயிற்று. அதற்கான கேள்வி தான் என்ன? என்று கேட்டுக்கொண்டே hSenid மென்பொருள் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி( Chief Technical Officer) ஹர்ஷா சஞ்சீவா மேடையேற, Yarl IT Hub இன் இரண்டாவது சந்திப்பு 21-05-2012 அன்று யாழ் பல்கலைக்கழக நூலக அரங்கில் ஆரம்பிக்கிறது. தொழின்முறை தகவல் தொழில்நுட்ப துறையில் விழிப்புணர்வையும், படைப்பாற்றல் திறனையும் மேம்படுத்துவதன் மூலம், யாழ்ப்பாணத்தை ஒரு சிலிக்கன் வாலியாக மாற்றவேண்டும் என்ற தூரநோக்கோடு Yarl IT Hub அமைப்பு செயல்பட்டுவருகிறது. கணணிதுறையில் ஈடுபாடுள்ள மாணவர்களுக்கு அவர்களின் வினைத்திறனை அதிகரிப்பதோடு, அந்த துறையில் உள்ள சவால்களையும் எதிர்பார்ப்புகளையும் துறைசார் நிபுணர்களை கொண்டு தெரியப்படு...

Ladies Coupe

அகிலா, நாற்பத்தைந்து வயது சிங்கிள். அப்பா திடீரென்று விபத்தில் இறந்துபோக, அவர் பார்த்துவந்த  இன்கம் டக்ஸ் அலுவலகத்து கிளார்க் உத்தியோகம் இவளுக்கு கிடைக்க, குடும்பத்தின் “அவள் ஒரு தொடர்கதை” சுஜாதாவாகிறாள். இடையில் எட்டு வயது குறைந்த இளைஞனுடன் காதல், அதுவும் வேண்டாம் என்று விலகி, வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பார்கள் என்று காத்திருக்க, இவளுக்கு கலியாணம் செய்துவைத்தால் வீட்டுப்பாரத்தை யார் பார்ப்பார்கள் என்று அவர்களும் ஜகா வாங்க, அப்படி இப்படி என்று வயசாகிவிட்டது. இப்போதும் தங்கை குடும்பம் அவளோடு அவள் வீட்டிலேயே ஒட்டி இருக்க, வெட்ட தெரியாமல், ஒரு நாள் போதும் சாமி என்று பெங்களூரில் இருந்து கன்னியாகுமரி ட்ரெயின் ஏறுகிறாள். அது ஒரு பெண்களுக்கான பிரத்தியேக பெட்டி. Ladies coupe! அதிலே பயணிக்கும் ஐந்து பெண்கள் தங்கள் கதையை சொல்ல சொல்ல … ரயில் வேகமாக நகருகிறது. கதை அதை விட!