தொழில்சார் சம்பந்தமான விஷயங்களை வெறுமனே ஒருவித அகடமிக் பாணியில் அணுகாமல், சுவாரசியமாக, ஆர்வத்தை தூண்டும் வகையாக எப்படி கொண்டு செல்லலாம்? அவற்றை வெறுமனே வேலை சார்ந்தது என்று நினைக்காமல், நித்தமும் சிந்தித்துக்கொண்டிருக்ககூடிய, விளையாட்டு இசை போன்ற எழுச்சி தரும் விஷயமாக எப்படி மாணவர்களை நினைக்கவைக்கலாம்? மாணவர்களுக்கு தொழிற்துறையில் நாளாந்தம் நடைபெறும் விஷயங்களை, அதன் செயற்பாடுகளை அந்த துறைகளில் இருந்து தொழிற்படுவர்களை கொண்டே பகிரவைக்க வேண்டும். ஆனால் அது கலந்துரையாடல் போன்று இல்லாமல் ஒரு சவாலாக இருக்கவேண்டும். பங்குபற்றும்போது ஒரு எக்சைட்மெண்ட் ... சுவாரசியம், தேடல் ஒருவித அட்டாச்மெண்ட், முடிந்து வீடு போனபின்னரும் நடந்த சம்பவங்கள் சிந்தனையில் ஓடிக்கொண்டு இருக்கவேண்டும். எப்படி செய்யலாம்? The Apprentice என்று அமெரிக்காவில் பிரபலமான டிவி சீரியல், பொதுவான வணிக, முகாமைத்துறையில் உள்ளவர்களுக்கிடையில் reality show பாணியில் போட்டிகள் வைத்து, elimination எல்லாம் வாரம் வாரம் நடைபெறும். நிறுவனங்களில் நடைபெறும் board room சந்திப்புகள், விவாதங்கள் எல்லாவற்றையுமே போட்டியில் உருவாக்கி, அதில...