மெல்பேர்னில் கேசி தமிழ்மன்றம் நிகழ்த்திய பொங்கல்விழா அன்று “இவர்கள் இன்று வந்தால்” என்ற இலக்கிய அரங்கில் “கம்பன்” தலைப்பில் எழுதிய கவி/உரை. என்னோடு கண்ணகியாக வீணாவும், பண்டாரவன்னியனாக அஜந்தன் அண்ணாவும், பாரதியாக கேதாவும், பெரியாராக ஆனந்தும் அரங்கேறினார்கள். நிகழ்வை தொகுத்துவழங்கியவர் பன்னிரண்டு வயது, மெல்பேர்னில் பிறந்து வளர்ந்த சிறுவன் துவாரகன். நன்றி கேதா அவை வணக்கம் கம்பநாடன் கவிதையிற் போல கற்றோர்க்கிதயம் களியாதே - என்று வந்திருக்கும் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். இன்றைக்கு இங்க வந்து மன்றத்தில் பேச சொல்லி பொங்கல் தந்த சடையப்ப வள்ளலுக்கும் வணக்கங்கள்! காலத்தை வென்று வாழும் காவிய நாயகர்கள் நால்வருக்கும் தமிழில் ஒரு ஹாய்!