Skip to main content

Posts

குளிர்காலம் வந்துவிட்டது

வெள்ளி அதிகாலை. காதுகளில் இலையுதிர் பருவத்து கூதல். கூடவே ஸ்டீபன் ஹோக்கிங்கும் இளையராஜாவும். ரயில் பயணத்தில் யன்னலோரமாய் நான். நீயும் இருந்து பாரேன். நிச்சயம் பிடிக்கும். யன்னலோரத்தையும் பிடித்துவிடுவாய். வரிகள் மாறுகிறது. யன்னலோரமாய் நீ. இயர்போனில் எனக்கு ஒரு காது. உனக்கு மறு காது. "இசைதேவன் இசையில் புது பாடல் துவங்கு எனை ஆளும் கவியே" யூகலிப்டஸ் மரங்களில் அப்படி என்ன பித்து? திரும்பிப் பாரேன் என்னை. கருந்துளை விழிகளால் கவர்ந்திழுக்கிறாய். விழுந்தவன் தொலைந்து போனேன். "உனை பார்த்த மயக்கத்திலும் முகம் பூத்து மலரும். நமை வாழ்த்த வழி தேடி தமிழும் தலை குனியும்" தான் நாணி நமை வாழ்த்தும் தமிழும் தன் வார்த்தை தொலைத்தது! குறுஞ்செய்தி ஒலி. பக்கத்தில் இருந்தும் எஸ்எம்எஸ் அனுப்பும் வேடிக்கை விநோதக்காரியே. இந்த விடியலை கூடி ரசிக்கும் வேளை இது. அதிகாலை கதிரே அலங்கார சுடரே புதுராகம் நான் பாட வேண்டாமா?" சுணங்காமல் வந்துவிடு- இங்கே குளிர்காலம் வந்துவிட்டது.

MH 370

சுப்புரத்தினம், கிராம சேவையாளர் கி/255 வட்டக்….” “கச்சி” யை வாசிக்கக்கூட அவகாசம் கொடுக்காமல் படலையைத் திறந்துகொண்டு நுழைபவனுக்குப் பெயர் தம்பிராசா. பார்வைக்கு அறுபது. நிஜ வயதுஐம்பது. பெரும்போக விவசாயி. அவனின் ஒரே ஒரு ஏக்கர் வயல்காணி பனைமண்டிக்கு நடுவே தனித்துக் கிடப்பதால், அவன் எவ்வளவு மன்றாடினாலும், சிறுபோகத்தில் வாய்க்கால் திறந்துவிடுறாங்கள் இல்லை. முறைப்பாடு செய்து களைத்துப்போய் விட்டான். சோலி வேண்டாம் ன்று தம்பிராசா ஆடு வளர்க்கத்தொடங்கினான். ஆடென்றால் ஒன்று இரண்டு இல்லை. அது பெரிய பட்டி. எழுபது எண்பது தேறும். எண்ணக்கூடாது. எண்ணினால் தரித்திரம் பிடித்துவிடும்.  கடந்த இரண்டு நாட்களாக தம்பிராசாவின் பட்டியிலிருந்து ஆடுகள் காணாமல் போகத் தொடங்கியிருக்கின்றன. முதலில் அந்த சிவத்த செவியன் கிடாய். நேற்று இரண்டு மறிக்குட்டிகள். பட்டிக்குத் திரும்பவில்லை. இரவிரவாக தேடி, விசாரித்து; விடிய வெள்ளணை பன்னங்கண்டிப் பக்கம் தேடுவோம் என்றுபோனபோதுதான் ...  விதானையாரின் வாசற்படி வந்துவிட்டது.

ஏ ஆர் ரகுமான் - பாகம் 2

  முதல் பாகத்தை வாசிக்க இங்கே அழுத்துக. “அல்லா ராக்கா ரகுமான்” இந்த இசைத் தூதனை நான் நேரடியாக காணும் நாளும் வந்தது. இடம் சிங்கப்பூர். மனம் சஞ்சலத்தையும் அமைதியின்மையும் கூடவே காவிக்கொண்டு திரிந்த காலம். ரகுமான் வருகிறார் என்று தெரிந்ததும் கஜனுக்கு தொலைபேசி அழைத்தேன். “மச்சான் நூற்றைம்பது டொலர், டூ மச்” என்று தயங்கினான். “கடவுளுக்கெல்லாம் கணக்கு பார்க்கக்கூடாது, நீ வா, நான் டிக்கட் எடுக்கிறேன்” என்றேன். போனோம். அரங்கத்துக்குள் நுழையும்போதே ஒருவித பரவசம். “தில்சேரே…” என்று ரகுமான் உச்சஸ்தாயியில் முழங்க எம்மை அறியாமலேயே பரவசத்தில் எழுந்துவிட்டோம்.

ஏ ஆர் ரகுமான் - பாகம் 1

  இடம் காஷ்மீர். ரிஷி. அவன் மனைவி ரோஜா. மூன்றாவது நபர் இசை. மூவரும் ஹோட்டல் ரூமில் தங்கியிருக்கிறார்கள். அந்த இளம் தம்பதியரின் காதல் விளையாட்டிற்கு இசை “பக்கவாத்தியம்” வாசிக்கும். பிரதானமாக பியானோ. காட்சியின் ஆரம்பத்தில் காதல் ரோஜாவின் பாடலில் இன்டர்லூட் ஹம்ம்மிங், “லலலலலல லல லா லல லாலாலா” டியூன் ஸ்ட்ரிங்ஸ் வாத்தியமொன்றில் போகும்.

கோச்சடையான் - முன்னோட்டம்

டொய் ஸ்டோரி படத்தில் வூடி கதவை திறந்தபடி அங்கேயும் இங்கேயும் விட்டேத்தியாக நடந்து வரும்போது ஒரு கௌபோய் மான்லினஸ் அவனுக்கு இயல்பாகவே பொருந்திவரும். அது கலக்கல். 

மரணத்தின் பின் வாழ்வு.

  “டொப்…” … முதல் வெடி. பின்புறமாக. உரிக்கும்போது செட்டையை படக் படக்கென்று அடிக்கும் கோழி போல கைகள் இரண்டையும் அடித்துக்கொண்டு விழுகையில், இரண்டாவது வெடி. இம்முறை முதுகில்.  ஒரு அடி எட்டி வைத்திருப்பான். மூன்றாவது வெடி. பிடரியில். உதயன் இறந்துவிட்டான்.

தீண்டாய் மெய் தீண்டாய் - நாணமில்லா பெருமரம்.

  முதலிரவில் கௌதம் வெறும் அணைப்போடு மட்டும் நிறுத்திக்கொண்டதை அகல்யா ஆரம்பத்தில் பெரிதாக கணக்கில் எடுக்கவில்லை. கடவுள் பக்தன். கைனோகொலஜிஸ்ட். காதல் என்பது உடலில் அல்ல, மனதில் என்று முதற்தடவை சந்தித்தபோதே சொன்னான். ஜென்டில்மன்.  அகல்யாவுக்கு உள்ளம் குளிர்ந்தது. இவன் காதலில் மென்மை பாராட்டுபவன். . பூவோடு உரசும் பூங்காற்றை போலே சீரோடு அணைத்தால் அது சைவம் பாட்டு சீன் ஞாபகம் வந்தது. அகல்யா தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டாள். எவ்வளவு நாளைக்கு என்று பார்ப்போம்.