அப்போது ஜேவிபி கிளர்ச்சிக்காலம். 1971ம் ஆண்டு. சரத்ஹாமு தென்னிலங்கையிலே ஹக்மண என்ற ஊரில் வாழ்கின்ற தனவந்தர். ஊர் மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர். கௌரவமாக வாழும் குடும்பம். சரத்ஹாமுவின் மனைவி உள்ளூர் பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக இருக்கிறார். ஒருநாள் அந்தப்பாடசாலையில் இன்னொரு ஆசிரியையும் இணைகிறார். அந்த ஆசிரியை அண்மையில் அந்த ஊருக்கு மாற்றலாகி வந்திருக்கும் இன்ஸ்பெக்டர் சமரநாயக்காவின் மனைவி. நாளடைவில் இரண்டு ஆசிரியைகளும் நண்பிகளாகிவிடுகிறார்கள். தினமும் பாடசாலை முடிந்தபின் மனைவியை ஜீப்பில் அழைத்துப்போகவரும் இன்ஸ்பெக்டர், அந்த தனவந்தரின் மனைவிக்கும் லிப்ட் கொடுக்க ஆரம்பிக்கிறார். ஒருநாள் அப்படி இறக்கிவிடும்போது உள்ளேபோய் ஒரு டீயும் குடிக்கிறார். இன்ஸ்பெக்டர் குடும்பமும் தனவந்தர் குடும்பமும் நட்பு கொள்கிறது. டீ குடிக்க தினமும் இன்ஸ்பெக்டர் வரத்தொடங்குகிறார். தனவந்தர் இல்லாத டைம் பார்த்தும் வரத்தொடங்குகிறார். இன்ஸ்பெக்டரின் சரளமான ஆங்கிலம், மிடுக்கான சீருடை. கம்பீரம். சரத்ஹாமுவின் மனைவியின் அழகு. சிரிப்பு … இப்படி பல காரணங்கள். இன்ஸ்பெக்டருக்கும் சரத்ஹாமுவின் மனைவிக்கும் கள்ளத்தொடர்...