“எத்தினை மணிக்கு செத்துப் போனீங்கள்?” “இப்பத்தான் தம்பி … ஒரு அரை மணித்தியாலம் இருக்கும்” “சரியான டைம் சொல்லுங்கோ”. இண்டர்கொம் கேட்ட கேள்விக்கு நித்தியானந்தன் விழித்தான். மணிக்கூட்டைப் பார்த்தான். முள்ளு மிக வேகமாக சுழன்றுகொண்டிருந்தது. இது எந்த ஊர் மணிக்கூடு என்ற குழப்பம் வந்தது. நித்தியானந்தன் தூக்கு மாட்டிய சமயம், அடுத்த அறையில் மனைவி கோமதி கொம்பியூட்டரில் எதையோ நோண்டிக்கொண்டிருந்தது ஞாபகம் வந்தது. ஒரு ஏழு ஏழரை இருக்கலாம். நித்தியானந்தன் ரொட்டிக்கு மா பிசைந்துகொண்டிருந்தபோது எடுத்த திடீர் தற்கொலை முடிவு. மா இன்னமும் அவன் கைகளில் ஒட்டியிருந்தது. முதல்தடவை மாட்டும்போது சுடுதளம் பிசகி, தவறி விழுந்து, இரண்டாம் தடவை சரியாக மாட்டும்போதுதான் அது சரி வந்தது. நன்றாக ஞாபகம் இருக்கிறது. அப்போது நேரம்,