அனைவருக்கும் வணக்கம். சிறுகதைகள். சிறுகதைகள் என்றால் என்னவென்று இப்போது ஒரு கேள்வி கேட்டால் இங்கிருந்து நூற்றைம்பது வரைவிலக்கணங்கள் வந்து சேரும். ஐம்பது பேர் உள்ள கூட்டத்தில் நூற்றைம்பது வரைவிலக்கணங்கள் வருகிறதென்றால், ஆளுக்கு மூன்று வரைவிலக்கணம் ரெடியாக வைத்திருக்கிறோம் என்று அர்த்தம். இப்போது இதுதான் சிறுகதை என்று தீர்மானமாக எல்லோரும் கூடி ஒரு அறிக்கை விட்டாலும் நாளைக்கும் இல்லை என்று வேறுவிதமாகத்தான் சிறுகதை எழுதப்படும். ஒருவன் ஒரு கதை எழுத உட்காரும்போது இந்த கட்டுரைகளையெல்லாம் வாசித்துவிட்டும் ஆரம்பிக்கப்போவதில்லை. அதனால் எது சிறுகதை என்கின்ற விவாதத்தினுள் நான் செல்லப்போவதில்லை. டைம் வேஸ்ட்.