சிலவாரங்களுக்கு முன்னர் குமார் என்பவர் தொலைபேசி அழைப்பெடுத்து என்னோடு ஒரு வானொலி நேர்காணல் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வானிசை என்று இங்கே மெல்பேர்னில் இயங்குகின்ற பிராந்திய வானொலி மையமொன்று. “சரி, செய்யலாம்” என்றேன். “நல்ல கேள்விகள் இருந்தால் சொல்லுங்கள்” என்று வழமைபோல என்னிடமே கேட்டார்! சிரித்துவிட்டு, “நீங்களே கேளுங்கள், எதுவானாலும் ஒகே, ஆனால் என்னைப்பற்றி இல்லாமல் பொதுவான வாசிப்பு, இலக்கியம் பற்றி அமைந்தால் கேட்பவர்களுக்கு பிரயோசனமாக இருக்கும்” என்றேன். “இடக்கு முடக்காகக் கேட்கலாமா?” என்றார். “கேட்பது உங்கள் வேலை, ஆனால் சர்ச்சையான பதில்களை என்னிடமிருந்து எதிர்பார்க்காதீர்கள்” என்றேன். இனிமையான மனிதர். புரிந்துகொண்டார். சென்ற வெள்ளியன்று பேட்டி நேரடியாக ஒலிபரப்பானது. எமில்ராஜா என்பவர் பேட்டிகண்டார். முன்னர் சக்தி எப்.எம்மில் பணிபுரிந்ததாகச் சொன்னார். ஞாபகம் இல்லை. நானறிந்து எழில்வேந்தன் என்பவர் முன்னர் சக்தியில் இயக்குனராக இருந்தார். அப்புறம் அபர்ணாசுதன் வந்தார். அபர்ணாவையும் லோஷனையும் குணாவையும் தனிப்பட்ட ரீதியிலும் தெரியும். குணாவுடன் "அழைத்துவந்த அறிவிப்பாளர்...