Skip to main content

Posts

கந்தசாமியும் கலக்சியும் நிகழ்வு புகைப்படங்கள்

ஜேகே.வின் ‘பொண்டிங்’- கதை சொல்லும் விளையாட்டு

"பதாகை" இணைய இதழில் பொண்டிங் சிறுகதை பற்றி வெளிவந்திருக்கும் விமர்சனம். ஜேகே.வின் ‘பொண்டிங்’- கதை சொல்லும் விளையாட்டு பொண்டிங் சிறுகதைக்கான சுட்டி பொண்டிங் நன்றி.

SBS வானொலி நேர்காணல்

நேற்றைய தினம் அவுஸ்திரேலிய தேசிய வானொலிச்சேவையான SBS இல் வெளியான எனது நேர்காணல். பகுதி 1 http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/puttkngkllaik-kuuvikkuuvi-virrk-veennttiy-kiilllttrmaannn-nilaiyil-ellluttaallr-cmuukm?language=ta பகுதி 2 http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/naannn-elllutuvtu-aavnnppttuttlukkaak-all?language=ta

ஜே.கே.யின் கந்தசாமியும் கலக்சியும் - முருகபூபதி

"மௌன வாசிப்பில் வெடித்தெழும் சிரிப்பலைக்குள் மூழ்கும் அனுபவம் தரும் நாவல்" நவீன படைப்பிலக்கியப்பிரதிகளை நான் வாசிக்கத்தொடங்கிய 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் ஒரு எழுத்தாளர், "இலக்கியம் படைப்பவர்களுக்கு கம்பராமாயணமும் கல்குலசும் ஓரளவாவது தெரிந்திருக்கவேண்டும்" என்றார். அவுஸ்திரேலியாவில் எமக்கு கணினி அறிமுகமானதன் பின்னர், எழுத்தாளர்களுக்கு கம்பராமாயணம் முதல் கம்பியூட்டர் வரையில் தெரிந்திருத்தல் வேண்டும் என்ற நிலை வந்தது. ஜே.கே. எழுதியிருக்கும் கந்தசாமியும் கலக்சியும் படைப்பை படித்ததும், மேலும் ஒரு படி சென்று கலக்சியும் தெரிந்திருக்கவேண்டியதாயிற்று. ஒரு ஓவியக்கண்காட்சியில் பால்வீதியை சித்திரிக்கும் படத்தை பார்த்திருக்கின்றேன். பால்விதியில் கலக்சி வருகிறதாம். பார்த்ததில்லை. ஜே.கே.யின் இந்தப்படைப்பில் பார்க்க முடிகிறது. ஒரு நாவலாக தொடங்கினாலும் நாவலுக்கே உரித்தான நேர்கோட்டுத்தன்மையில் விரியவில்லை.

இடியட்

கடந்த இருவாரங்களாக தாஸ்தாயேவ்ஸ்கியின் “இடியட்” என்ற நாவலை ஒலிப்புத்தகமாகக் கேட்டுவருகிறேன். ரயில் யன்னலோரமாக உட்கார்ந்து, அதன் மிதமான தள்ளாட்டத்தோடு கதைகளை வாசித்து வந்தவனுக்கு மகிழூந்திலே பயணம் செய்யும்போது ஒலிப்புத்தகத்தைக் கேட்பது என்பது புது அனுபவம். முன்னால் செல்லும் வாகனம் பாதை மாறும்போதும், சிக்னல் நிறம்மாறும்போதும், பின்னால் வரும் வாகனத்திலுள்ள பெண் மூக்கு குடையும்போதும் புத்தகத்திலிருந்தான நம்முடைய கவனம் தவறும்.  புத்தகத்தை வாசிப்பதற்கும் ஒலிப்புத்தகத்தைக் கேட்பதற்கும் பாரிய வித்தியாசம் உண்டு. ஒலிப்புத்தகத்தில் நமக்கும் புத்தகத்துக்குமிடையே வாசிப்பவர் எப்போதுமே விளக்குப்பிடித்துக்கொண்டு நிற்பார். அது வாசகருக்கும் புத்தகத்துக்குமான நெருக்கத்தையும் ஆழமான அமைதியையும் குலைக்கிறது. கூடவே வாசிப்பவரின் வேகத்துக்கும் குரல்மொழிக்கும் நம்முடைய மனவேகம் இயைவாக்கப்படவேண்டும். நாமே வாசிக்கும்போது எங்கோ ஒரு ஆழத்தில் ஒலிக்கின்ற நம்முடைய தனித்த குரல் இங்கே ஒலிக்காது. எழுத்துநடை போன்று ஒவ்வொரு வாசகருக்கும் ஒரு தனித்த நடை உண்டு. வாசகருக்கேயுரிய எள்ளல், சிரிப்பு, ஆண், பெண் முத...

மெல்பேர்னில் "கந்தசாமியும் கலக்சியும்"

அன்போடு அழைக்கிறோம்