Skip to main content

Posts

மஹாகவியோடு ஒரு மாலைப்பொழுது

அளவற்ற மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் இந்த அறிவிப்பினைச் செய்கிறோம். மஹாகவி பற்றிய நிகழ்வினைச் செய்தல்வேண்டும் என்பது நமது நீண்டநாளைய கனா.  திரு முத்துகிருஷ்ணனின் வருகை நம்மை அதற்காக மீண்டுமொருமுறை ஒருங்கிணைத்திருக்கிறது. “இன்னவைதாம் கவியெழுத ஏற்ற பொருள் என்று பிறர் சொன்னவற்றை நீர்திருப்பச் சொல்லாதீர். மின்னல் முகில் சோலை கடல் தென்றலினை மறவுங்கள் – மீந்திருக்கும் இன்னல் உழைப்பு ஏழ்மை உயர்ச்சி என்பவற்றைப் பாடுங்கள்” என்ற கவிஞனின் படைப்புகளோடு வரும் சனி மாலைப்பொழுதைக் களித்து மகிழ இருக்கிறோம். வந்து, கேட்டு, பகிர்ந்து, உயிர்த்து, முகிழ்த்து, நினைந்து மகிழ்வீர்கள் என்ற நம்பிக்கையுடன், அன்புடன் அழைக்கிறோம். நன்றி.

ஓய்வு

புகழின் உச்சத்தில் இருக்கும்போதே மரியாதையாக ஓய்வு பெற்றுவிடல் வேண்டும் என்பது பொதுவெளியில் இருக்கின்ற கருத்தியலாக இருக்கிறது. ஒருவர் திறமையாக விளையாடும்போது ஓய்வுபெறுதலும், கலைத்துறையில் உச்சியில் இருக்கும்போது ஓய்வுபெறுதலும் பெருமைக்குரிய விடயமாக கருதப்படுகிறது. ஒருகட்டத்தில் அந்த எண்ணம் மேலோங்கி, துறையாளர்கள் மனதிலும் ஆழத் திணிக்கப்பட்டும் விடுகிறது.

பாழ் மனம்

ஏழாவது தடவையாக தொலைபேசி மணி அடித்தபோதே தயங்கியபடி எடுத்தேன். அம்மா. “வீட்ட வந்திட்டியா?” என்று கேட்டார். “சாப்பாடு என்ன பிளான்?” என்றார். “நேத்தையான் புட்டு இருக்கு, கறிச்சட்டியும் கிடக்கு. பிரட்டிட்டு முட்டையையும் பொரிச்சா விசயம் முடிஞ்சுது” என்றேன். “சித்தப்பாவிண்ட தமையன் இறந்துபோனார், எடுத்துக் கதைச்சியா?” என்றார். “இல்லை” என்றேன். “அண்ணாவோட கதைச்சியா?”. “இல்லை”. “ஹீட்டர் சரியா வேலை செய்யேல்ல எண்டனி, பேசினியா?”. “இல்லை”. “சரி, நாளைக்குத் தோசைக்குப் போட்டிருக்கு, ரெண்டு பெரும் வந்திடுங்கோ” என்றுவிட்டு கட் பண்ணிவிட்டார். தொலைபேசியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஏழு தடவைகளும் ஏன் தொலைபேசியை எடுக்கவில்லை என்று அம்மா என்னிடம் கேட்கவேயில்லை. சித்தப்பாவோடு ஏன் பேசவில்லை என்றும் திட்டவில்லை. “இவனைத் திருத்தமுடியாது” என்று மனதுக்குள் நினைத்திருக்கலாம்.

நாம் தமிழர்

ஒரு தமிழ்நாட்டுத் தமிழரோடு தேநீர் குடிக்கும் சந்தர்ப்பம் அமைந்தது. பேச்சுவாக்கில் “ஈழத்தமிழர்களுக்கு என்று என்ன அடையாளம் இருக்கிறது? மொழி முதல் கலாச்சாரம், உணவுவரை எல்லாமே எங்களிடமிருந்து வந்ததுதானே?” என்று நெல்லிச்சாக்கைத் தெரியாத்தனமாக அவிழ்த்துவிட்டார். எனக்கு அன்றைக்கு என்ன மூடு இருந்ததோ தெரியவில்லை. அவருக்குப் பதிலளிக்கவேண்டும்போலத் தோன்றியது. ஆரம்பித்தேன்.

விளமீன் சிறுகதை பற்றி வைதேகி

விளமீன் - ஜே.கே (புதியசொல், ஏப்ரல்- ஜூன் 17) "வீ ஓல்மொஸ்ட் கோயிங் டு த்ரோ இட். நோ வன் பை இட்" என்ற நிலையில் இருந்த அந்த விளமீன் கடைசியில் சரசுமாமியின் கைப்பக்குவத்தில் குழம்பாகி ஜென்ம சாபல்யம் அடைந்தது என்பது தான் கதையின் பிரதான குறியீடு.

அங்காடிப் பெண்

இரவு உணவுக்கு நண்பர்கள் வருவதாக இருந்தது. வீடு படு குப்பையாக இருந்தது. சமையல் சாமான்கள் எல்லாம் தீர்ந்திருந்தது. வாங்கவேண்டும். சமையலறை சின்ங் முழுதும் ஒருவாரத்துப் பாத்திரங்கள் நிறைந்திருந்தன. மினுக்கவேண்டும். வேலைக்கு லீவு போடலாம் என்றால் அன்றைக்கு என்று பார்த்து ஒரு ரிலீஸ் இருந்தது. போயே தீரவேண்டும். அவளும் பிஸி. காலை ஐந்தரைக்கே அன்றைய நாள் மிரட்ட ஆரம்பித்தது. மிக நீண்ட நாளுக்கான காலை மிக அலுப்புடனேயே விடியும். அன்றும் அப்படித்தான். எல்லாவற்றையும் மறந்துவிட்டு சற்றுநேரம் தூங்கினால் என்ன என்று இருந்தது. முடியவில்லை. தேநீரை ஊற்றி ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தேன். “மாஸ்டர் அண்ட் மாகரிட்டா” நாவல் அலுப்படித்தது. கடவுள் தத்துவ விசாரங்கள் எல்லாம் இப்போது பயங்கரமாக அலுப்படிக்கின்றன. இருக்கு இல்லை என்ற விவாதங்கள் வெறும் வெற்று. இருக்கு என்றால் இருக்கு. இல்லை என்றால் இல்லை. இரண்டாலும் எந்தப்பயனும் இல்லை என்பதே உண்மை. புத்தக வாசிப்பு மனிதர்களின் இயல்புகளைப் பெரும்பாலும் மாற்றியமைப்பதில்லை. அவை கொடுக்கும் விசுவரூப தருணங்களின் நீளம் மிகக்குறைவு. அதிகம் போனால் சேம் பின்ஞ் சொல்ல வ...

நாயகிகள்

எங்கள் அலுவகத்தில் இரண்டு நாய்கள் இருக்கின்றன. அல்லது இருக்கிறார்கள். ஒருத்தி பெயர் லூசி. மற்றையவள் கிரேஸ். நிறுவனத்தின் உரிமையாளர்கள் வளர்க்கும் நாய்கள் அவர்கள். இருவருமே அவுஸ்திரேலிய ஷெப்பர்ட் வகை. லூசிக்குப் பத்து வயது ஆகிறது. அனுபவம் நிறைந்தவள். புலோண்ட் முடி. கிரேஸுக்கு இரண்டு வயதுதான். கறுப்பு வெள்ளை. ஒரு இளம் நாய்க்குரிய துடிப்பும் விட்டேற்றியும் பரபரப்பும் அவளிடம் எப்போதுமே குடிகொண்டிருக்கும்.  அவ்விரு நாய்களையும் அவர்கள் தம் குழந்தைகள்போலவே வளர்த்தார்கள். அவர்கள் ஈழத்தமிழர்களாக இருந்திருந்தால் எக்கணம் லூசியையும் கிரேசையும் ஊருக்குக் கூட்டிப்போய் மண்டபம் பிடித்து சாமத்திய வீடு செய்திருப்பார்கள். அவ்வளவு பாசம். நான் அந்த அலுவலகத்துக்கு முதன்முதலாக நேர்முகத்தேர்வுக்கு உள்ளே நுழையும்போது லூசியும் கிரேசும்தான் குரைத்தபடி என்னை வரவேற்றார்கள். நேர்முகத்தேர்வுக்கேயுரிய சிறு பதட்டத்தோடுதான் உள்ளே நுழைந்தேன். நாய்கள் குரைத்ததும் “என்னடா ரிசல்ட் இப்பவே வந்துட்டுதா?” என்று சிறு அதிர்ச்சி. பின்னாலேயே வந்த நிறுவன உரிமையாளர் அவ்விருவரையும் அதட்டி, நட்போ...