Skip to main content

Posts

ஆனந்தம் அண்ணை

மனிதர்களை எப்படி இலகுவில் கடந்துபோய்விடுகிறோம் என்பது புரியாத புதிராக இருக்கிறது.  ஆனந்தம் என்று ஒரு அண்ணை. அப்பாவின் உதவியாளர். நவாலியில் வசித்தவர். நெடுவல். நெடுவலுக்கேற்ப முகமும் நீளம். பற்களும் நீளம். அவற்றில் ஒன்றிரண்டைக் காணக்கிடைக்காது. மீதம் வெற்றிலைச்சாயம் படிந்திருக்கும்.  அண்ணை தன் ஒரு காலைக் கொஞ்சம் தாண்டித் தாண்டியே நடப்பார். ஏன் அப்படி என்று தெரியாது. போலியோவாக இருக்கலாம். அல்லது ... தெரியாது. அண்ணர் நன்றாகச் சிங்களம் கதைப்பார். சிங்களப்பாட்டு பாடுவார். 'சந்திராவே மேபாவே நாவா' என்று என்னைப் பாடசாலைக்கு அழைத்துச்செல்லும்போது பாடிக்கொண்டே சைக்கிள் மிதிப்பார்.

எம். ஜி. சுரேஷ்

எம். ஜி. சுரேஷ் காலமாகிவிட்டார். நண்பர் ஆனந்த் பாலாதான் முதன்முதலில் எம்.ஜி.சுரேஷை எனக்கு அறிமுகப்படுத்தியவர். ஆனந்த் எம்.ஜி.சுரேஷின் அதி தீவிர ரசிகர். எழுத்தாளர்களை ‘அவன், இவன்’ என்று உரிமைகொண்டாடும் வாசகர். “அவன் எம்.ஜி.சுரேஷ் இருக்கானே ஜேகே, தமிழ்ல ஒரு டான் பிரவுண் மாதிரி. செமயா இருக்கும். நீங்க வேணும்னா ஒரு தடவை வாசிச்சுப்பாருங்களேன்”

சொல்லவேண்டிய கதைகள்

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான லெ. முருகபூபதி எழுதிய “சொல்லவேண்டிய கதைகள்” என்கின்ற நூலின் வெளியீட்டு நிகழ்வு வரும் சனிக்கிழமை மாலை இடம்பெற இருக்கிறது. முருகபூபதி நிறைய அனுபவங்களைச் சுமந்து திரிபவர். அவர் அவற்றைச் சொல்லும்போது ஒருவித பத்திரிகைத் துணுக்குத்தனம் தொனிக்கும். பெரும்பாலும் புனைவு கலக்காமல், முன்முடிபுகள் சேர்க்காமல் செய்தியாகவே அனுபவங்களை முருகபூபதி சொல்வார். ஒரு அனுபவத்தைப் பகிரும்போது மூலச் செய்தி என்று ஒன்று இருக்குமல்லவா? ஏனைய விடயங்கள் எல்லாம் அந்த மூலச் செய்தியைச் சுற்றி, அல்லது அதனை நோக்கியே நகருவதுண்டு. ஆனால் முருகபூபதியின் அனுபவப்பகிர்வுகள் அப்படியானவை அல்ல. செய்தியின் மூலம் என்பது அவருக்கு எந்நேரமும் நகர்ந்துகொண்டே இருக்கும். அல்லது பல மூலங்களின் வழியே செய்தி கடத்தப்படும். அல்லது ஒரே மாட்டை முருகபூபதி பல மரங்களில் கட்டிவிட்டுப் பல மரங்களைப்பற்றிப் பேசுவார். மாடும் அவ்வப்போது வந்து வந்து போகும். இதன் சிறப்பு என்னவென்றால், அவரே அறியாமல், உணராமல் பல பொக்கிசங்கள் அவர் பேச்சின்வழி வந்து வீழும். அதற்காகவே அவரின் கதைகளை நான் குறுக்கிடாமல் தொடர்ந்து கேட்பதுண்டு.

மச்சாங்

“ஐ,நா கோஷ்டியோடு சங்கமித்து ரோகிங்கியா மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இதே ஐநா கூட்டம்தான் இலங்கைக்கு எதிராகவும் “fake news” பிரச்சாரத்தை, நாம் தீவிரவாதத்தை முறியடித்துக்கொண்டிருக்கையில் நமக்கெதிராகக் கையாண்டது. நான் அந்த மக்கள் கொல்லப்படவில்லை என்று சொல்லவில்லை. ஆனால் எதையும் இலகுவில் முடிவு செய்துவிடாதீர்கள்”

பால் சமத்துவத் திருமணங்கள்

“பால் சமத்துவத் திருமணங்களைச் சட்டரீதியாக அங்கீகரிக்கவேண்டுமா?” என்கின்ற தபால்மூலக் கருத்துக்கணிப்பு ஒன்று அவுஸ்திரேலியாவில் விரைவில் இடம்பெற இருக்கிறது. தீவிரமான ஆதரவு, எதிர்ப்புப் போராட்டங்கள், இருபெரும் அரசியல் கட்சிகளின் எதிரெதிர் நிலைகள், நீதிமன்ற வழக்குகள் என்று இந்தப்பிரச்சனையில் அவுஸ்திரேலியா ஒரு தீர்வினை எட்டமுடியாமல் தள்ளாடினாலும்கூட தொடர்ச்சியாகச் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் இந்தப்பிரச்சனை பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஆங்கில ஊடகங்களிலும் சமூக அமைப்புகள் மத்தியிலும் இது பற்றிய வாதப்பிரதிவாதங்கள் மிக ஆழமாக இடம்பெறத்தொடங்கிவிட்டன. கருத்துக்கணிப்புப் பற்றிய அறிவுப்பு வெளிவந்தபின்னர் “வேண்டும்” என்கின்ற பிரிவும் “கூடாது” என்கின்ற பிரிவும் தத்தமக்கு ஆதரவுதேடி மிகப் பரவலான பிரச்சாரங்களை ஆரம்பித்துவிட்டன. ஆனால் அவுஸ்திரேலியாவிலுள்ள தமிழ் சமூகத்தின் மத்தியில் இதுபற்றியக் கலந்துரையாடல்கள் இன்னமும் பரவலாக இடம்பெறத் தொடங்கவில்லை என்றே தோன்றுகிறது. நாம் வாழும் சூழலில் இடம்பெறுகின்ற, நம்மோடு வாழுகின்ற சக மனிதர்களின், அதுவும் சிறுபான்மை மனிதர்களின் உரிமைசார்ந்த ஒரு விடயத்தை,...

மாலைப் பொழுதிலொரு மேடை

பொம்பே ஜெயஸ்ரீயின் இசை நிகழ்ச்சி முடிந்து இரண்டு நாள்களாகிவிட்டன. ஆனாலும் இன்னமும் மழை நின்றும் தூறல் அடங்காத கதைதான். எந்நேரமும் அவர் பாடல்களோடே இருக்கிறேன். இதை எப்படி விவரிப்பது என்று விளங்கவில்லை. உணர்ச்சி மிகுந்த நிலையில் எழுதக்கூடாது என்று நினைத்திருந்தேன். இப்போது எழுதியாவது கடக்கலாமா என்று பார்க்கிறேன்.

என் மக்களின் கனவு

“மரங்கள் குழுக்களாகவே வாழ்கின்றன. மனிதர்களைப்போல. ஒரு மரத்தை அதன் குழுவிலிருந்து பிரித்து வேறொரு இடத்தில் கொண்டுபோய் நடுவது என்பது ஒரு மனிதரை தன்னுடைய இனக்குழுவிலிருந்து பிரித்து இன்னொரு நாட்டுக்குக் கொண்டுசென்று வளர்ப்பதுபோன்றது. மரங்கள் அப்போது அகதிகளாக்கப்படுகின்றன.” “My People’s Dreaming”. அவுஸ்திரேலியப் பழங்குடிகளின் வாழ்வு எப்படி இயற்கையோடு பின்னிப்பிணைந்து கிடக்கிறது என்பதைப் படங்களோடு சேர்த்து விளக்கும் புத்தகம் இது. யூலின் தேசத்துப் பழங்குடியின் மூத்தவரான மக்ஸ் டுலுமன்முன் என்பவரோடான உரையாடல்களின் தொகுப்பே இந்த நூலாகும். புத்தகம் முழுதும் அங்கிள் மக்ஸ் பழங்குடி மனிதர்களின் நிலத்தினுடனான உறவை விரிவாக விளக்குகிறார்.