மொழிபெயர்ப்புகளில் கீதா மதிவாணன் அக்காவுக்கு எப்போதுமே தனியிடம் உண்டு. நிறைய அவுஸ்திரேலிய படைப்புகளை அவர் மொழிபெயர்த்திருக்கிறார். அண்மைக்காலங்களில் அவர் பல்வேறு சமூகங்களில் வழக்கத்திலுள்ள் பழமொழிகளைத் தமிழ்ப்படுத்தித் தந்துகொண்டிருக்கிறார். மூலம் சிதறாமலும் அதே சமயம் மொழிபெயர்ப்பு என்று தெரியாதவண்ணமும் அவை மிக இயல்பாக இருக்கின்றன. உதாரணத்துக்கு சில. முட்டாள்கள் சந்தைக்குப் போகாவிடில் மோசமானவை எல்லாம் எப்படி விற்பனையாகும்? - ஸ்பெயின் கழுதையிடம் பூக்களை முகர்ந்துபார் என்று நீட்டினால் அது தின்றுவிடும். - ஆர்மீனியா சேவலைத் தலைவனாய்க் கொண்டு நடந்தால் கோழிப்பண்ணைக்குத்தான் வழி நடத்தப்படுவாய். - லெபனான் பட்டப்பகலை அரசன் இரவென்று சொன்னால், அதோ நட்சத்திரங்கள் என்று சொல். - அரேபியா உலகம் முழுதுமே மனிதர்களும் குணங்களும் ஒரேமாதிரியாகவே இருந்திருக்கின்றன என்பது இவற்றை வாசிக்கும்போது மீளவும் உறுதிப்படுத்தப்படும். மிக எளிமையான இவ்வகை பழமொழிகளை நம் தமிழ்போட்டிகளில் பயன்படுத்தக்கொடுக்கலாம். மாணவர்களிடம் இவற்றின் ஆங்கில வடிவத்தைச் சொல்லி தமிழில் மொழிபெயர்க்குமாறு கேட்கலாம். கீதா அக...