வணக்கம் Mr. JK, உங்கள் வலைதளம் மிக அருமையாக உள்ளது. இரு நாட்களுக்கு முன், என் தோழியின் பரிந்துரையினால் உங்கள் *ஆட்டிறைச்சி* பதிவை தான் முதலில் படித்தேன். சாதாரண விஷயத்தை கூட மிக சுவாரசியமா சொல்லுவார்னு சொன்னா. ஆனா இவ்வளவு அருமையா , எனக்கு பிடிச்ச மிக அழகான இலங்கை தமிழ்ல இருக்கும்னு எதிர்பாக்கல. உங்கள் எழுத்து நடை ரொம்ப பிடிச்சிருக்கு. சின்ன வயசுல இருந்து நிறைய படிக்கிறேன். ஒரு எழுத்தாளரோட எழுத்து நடை பிடிச்சா மட்டுமே, படித்ததையே திரும்ப திரும்பவும் கூட படிக்கிற பழக்கம் எனக்கு இருக்கு. புது எழுத்தாளர்கள் எழுதுவதை எல்லாம் படிக்க ஆரம்பிக்கவே ரொம்ப யோசிப்பேன். உங்க பதிவுகளை இரு நாட்களாக விடாமல் தொடர்ந்து படிக்கிறேன். 2011 இல் இருந்து ஆரம்பித்து. ஒரு சின்ன வேண்டுகோள். எனக்கு உங்கள் தமிழில் சில வார்த்தைகள் புரியல. சில இடங்கள்ள, உங்கள் பேச்சு வழக்கப்படி எழுதியிருக்கீங்களா, இல்ல ஆங்கில வார்த்தையை தமிழ்ல எழுதியிருக்கீங்களானு குழப்பம் வருது. பதிவின் சுவராசியத்தில , வேகத்தில் அதை விட்டுட்டா கூட, பிறகு அது என்னவா இருக்கும்னு யோசிக்க வைக்குது. உங்கள் பேச்சு வழக்கில் இருக்குற...