Skip to main content

Posts

கரண்டிக் கிராமம்

நோய்த்தொற்றுப் பரவத் தொடங்கி ஊர் முழுவதுமே முடங்கியிருந்த நாட்கள் அவை. அந்தக் காலத்தில்தான் நாங்கள் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி செல்ல ஆரம்பித்திருந்தோம். அம்மா என் தம்பியைத் தள்ளுவண்டியில் வைத்து உருட்டி வருவார். நானோ அப்பா எனக்குப் புதிதாக வாங்கிக்கொடுத்த ஸ்கேட்போர்டில் ஓடிவருவேன். சமயத்தில் அப்பாவும் எங்களோடு நடைப்பயிற்சியில் சேர்ந்துகொள்வதுண்டு. ஆனால் அவர் வந்தாலும் எம்மோடு ஒன்றாகச் சேர்ந்து நடக்கமாட்டார். நாங்கள் மெதுவாக நடக்கிறோம் என்று குறை சொல்லிக்கொண்டு அவர் தன்பாட்டுக்குப் பாட்டுக் கேட்டபடியே ஓடத் தொடங்கிவிடுவார். அதற்காக அம்மா அவரைக் கோபித்துக்கொள்வதுண்டு. நான் எதுவுமே சொன்னதில்லை.

த கிரேட் பனங்கொட்டைக் குசினி

அம்மாவின் சமையலுக்கு அடிமையாகாதவர்கள் வெகுசிலரே. அதன் காரணமும் எளிமையானது. சிறுவயதுமுதலே அம்மாவின் சமையலுக்கே எங்கள் நாக்குகள் இசைவாக்கப்பட்டிருக்கும். சிலபேருக்கு அது அம்மம்மாவின் சமையலாகவோ அக்காவின் சமையலாகவோ அமைந்திருக்கலாம். ஆனால் அடிப்படை ஒன்றுதான். எந்தச் சுவைக்கு சிறுவயதில் நாக்கு சப்புக்கொட்டியதோ அதையே நிஜமான ருசி என்று பெரும்பாலானவர்கள் வாழ்நாள் முழுதும் நினைத்துக்கொண்டிருப்பார்கள். அற்புதமான பாஸ்டாக்களையும் விறகு நெருப்பு பிட்ஸாக்களையும் தென் கிழக்கு ஆசிய குவே தியோக்களையும் அவற்றின் ருசியே அறியாமல் நாம் எள்ளி நகையாடிக் கவிதை எழுதுவதும் அதனால்தான்.

விருதுகள்

டூரிங் டாக்கிஸ் என்று சித்ரா லக்ஸ்மன் நடத்தும் யூடியூப் சனலை அவ்வப்போது பொழுதுபோக்காகக் கேட்பதுண்டு. அவர் ஒரு ஊடகவியலாளராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்தமையால் சுவாரசியமான திரைத் தகவல்களை அடிக்கடி பகிர்ந்துகொள்வார். ரசிகர்கள் கேள்விகளுக்கும் வார வாரம் பதில் சொல்வார். அவருடைய சென்ற வாரத்து நிகழ்ச்சியில் ஒரு ரசிகர் அற்புதமான கேள்வி ஒன்றைக் கேட்டார். “என்னால் பல பாடல்களில் எஸ்பிபிக்கும் மனோவுக்கும் வித்தியாசம் கண்டறிய முடிவதில்லை. அதேபோல ஜேசுதாசுக்கும் உன்னிமேனனுக்கும் இடையிலும் குரல் வித்தியாசம் தெரிவதில்லை, நீங்கள் எப்படி சார்?” அதற்குச் சித்ரா லக்ஸ்மனின் பதில். “நான் ஒரு இசை ரசிகனே ஒழிய கலைஞன் கிடையாது. எனக்கும் அந்தக் குழப்பங்கள் இருப்பதுண்டுதான்” இருந்துட்டுப் போகட்டும். என் நண்பன் ஒருவனால் எம். எஸ். சுப்புலட்சுமிக்கும் சித் ஶ்ரீராமுக்கும் இடையில்கூட வித்தியாசம் கண்டுபிடிக்கமுடிவதில்லை. ஹூ கெயார்ஸ்? ஆனால் பிரச்சனை அடுத்த சம்பவத்தில் இருக்கிறது.

ஊரோச்சம் : கட்டுநாயக்கா

பதினொரு மணிக்கே விமானம் தரையிறங்கிவிட்டது. சிங்கப்பூர், மெல்பேர்ன் விமானநிலையங்களில் பெரிதாக எவரும் மாஸ்க் அணிந்திருக்கவில்லை. ஆனால் கட்டுநாயக்காவில் அணிந்திருந்தார்கள். அது கொரணா கொஞ்சம் கொஞ்சமாகப் பரவ ஆரம்பித்திருந்த காலம். எல்லா மாஸ்குகளும் வாயை மட்டுமே மூடியிருந்தன. அதுவும் சரிதான் என்று தோன்றியது. தொற்று வந்து சளி பிடித்து மூக்கை அடைத்தால் வாயால்தானே மூச்சு விடவேண்டும்?

ஆதிரை வெளியீடுகள்

  சரியாக ஒரு வருடத்துக்கு முன்னர் ‘சமாதானத்தின் கதை’ வெளியானது. ஆதிரை பதிப்பகத்தின் முதல் வெளியீடு இது. அவர்களே எழுத்துப் பிழை திருத்தி, அட்டை வடிவமைப்பு, லே அவுட் எல்லாம் செய்து, அச்சடித்து, விநியோகித்து புத்தகங்கள் விற்று முடிந்ததும் அதற்கான உரிமைத் தொகையையும் கொடுத்தார்கள். ஈழத்தில் சில வெளியீட்டு நிகழ்ச்சிகளையும் செய்தார்கள். இந்தியாவிலும் ஏனைய நாடுகளிலும்கூட வாசிப்பு நிகழ்வுகளை செய்யப்போவதாக அவர்கள் சொல்லியிருந்தார்கள். ஆனால் அதற்குள் கொள்ளைநோய் பரவிவிட்டது.

நான்கு சம்பவங்கள்

சம்பவம் 1 அப்பா எனக்கொரு சைக்கிள் வாங்கித்தந்திருந்தார். அரைச்சைக்கிள். ஹீரோ. முதலில் நான் ஐந்தாம் ஆண்டு ஸ்கொலர்சிப் பாஸ் பண்ணினால்தான் வாங்கித்தருவேன் என்று சொல்லியிருந்தார். நானோ வாங்கித்தந்தால்தான் பாஸ் பண்ணுவேன் என்று அடம்பிடித்தேன். ஈற்றில் என் பிடிவாதம் தாங்காமல் பரீட்சைக்கு முன்னரே சைக்கிள் வந்துவிட்டது. புறக்கோட்டையில் வாங்கி லொறியில் எடுத்து வரப்பட்ட சைக்கிள். பெல்லுக்குப் பதிலாக பற்றரியில் வேலை செய்யும் ஹோர்ன் அதில் இருந்தது. சிவப்பு நிறம். வண்ண வண்ணமான டஸ்ட் கவருகள், குஞ்சங்கள் எனப் புதுச்சைக்கிள் ஜொலித்தது. அதில்தான் பாடசாலைக்குப் போவேன்.

வாணி

     எழுதும் வேகத்தில் பிழைகளைத் தவிர்ப்பது கடினமாகவே இருப்பதுண்டு. மனவேகத்துக்கு ஈடுகொடுத்து எழுதுவதே கடினம். அதிலும் பிழைகளில்லாமல் எழுதுவது எப்படி? சரி எழுதிய பிற்பாடு வாசித்துத் திருத்தலாம் என்றால் அப்போது பஞ்சி பிடித்துவிடும். தவிர எழுதிய எழுத்தை மீள வாசிப்பதும் கொல்லக்கொண்டுபோவதுபோல. அப்படியே திருத்த வெளிக்கிடுகையில் கூடுதலாக ஐந்து பந்தி சேருவதுதான் நிகழுமே ஒழிய எழுத்துத் திருத்தம் நிகழாது. இப்படியான சூழ்நிலையில்தான் சிலவருடங்களுக்கு முன்னர் வாணி பிழைதிருத்தியின் அறிமுகம் கிடைத்தது. எழுத்துப்பிழைகள், புணர்ச்சி விதி, குற்றியலுகரம் போன்ற இலக்கண விதிகளில் விடும் தவறுகள் போன்றவற்றை வாணி பிழைதிருத்தி அடிக்கோடிட்டுக் காட்டுவதுண்டு. அதையும் தாண்டி இறுதிப் பதிவில் பிழைகள் விடப்படுவது நிகழும்தான். ஆனால் நடுவருக்கு உதவியாக வந்த டி.ஆர்.எஸ்போல தவறுகளைக் குறைக்க வாணி எனக்குப் பெருமளவு உதவிசெய்திருக்கிறது. என்ன ஒன்று, ஈழத்தமிழ் சொற்களை அது விளங்கிக்கொள்ளாமல் திருத்த முயற்சிசெய்யும். ‘சீலம்பா’வை ‘சிலம்பா’ என்று மாற்றச்சொல்லும். ‘வெளிக்கிடுங்கள்’ என்றால் குழம்பிப்போய் அடிக்கோட்டோடு...