Skip to main content

Posts

பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் - மயிலன்

பொதுவாகவே மரணங்களின் பின்னர் மனிதர்களுக்கு அவர்களின் சுற்றத்தவர்களாலும் அறிந்தவர்களாலும் புதிய பல அவதாரங்கள் கொடுக்கப்படுகின்றன. பெரும்பாலும் அவை நல்லவையாகத்தான் இருப்பதுண்டு. அந்தியேட்டிக் கல்வெட்டுகளிலும் அஞ்சலிக் கட்டுரைகளிலும் முதற்தடவையாக அவற்றை நாம் அறிந்துகொள்ளும்போது சமயத்தில் நமக்கு ஆச்சரியமும் அடைவதுண்டு. அகால மரணங்களின்போது இவ்வடிவங்கள் மேலும் அதீத எல்லைகளைத் தொடுவதுண்டு. ஆனால் அதுவே ஒரு தற்கொலை மரணம் ஆகிவிட்டால் இந்தக் கட்டமைப்புகளில் சின்ன பச்சாதாபமும் சிறுமையும் ஒட்டிக்கொண்டுவிடுகின்றன. தற்கொலை செய்த மனிதர்களுக்கு மற்றவர் செய்யும் அஞ்சலிகளைக் கூர்மையாகக் கவனித்துப்பாருங்கள். அவற்றில் அதிகாரமும் மேதாவித்தனமும் தொக்கி நிற்கும். அக்கணம் உயிரோடு இருக்கும் நாம் இறந்தவரைவிடச் சற்றுப் பெரியவராகிவிடுகிறோம். அறிவுரை சொல்லும் நிலைக்கு உயர்ந்துவிடுகிறோம். மிகவும் நெருக்கமானவர் என்றால் கூடவே ஒரு குற்ற உணர்வும் சேர்ந்துகொள்ளும். தற்கொலைக்கான காரணங்களைத் தேட ஆரம்பிப்போம். பல சமயங்களில் நாம் உருவாக்கி வைத்திருக்கும் காரணங்களுக்கான சாட்சியங்களைத் தேடிப்போவோம். அவர் ஏன் அப்படி இறந்தார் எ...

காளான் பஜ்ஜி

ஆர்த்திகனின் ‘ARN’ காளான் கடை உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர் மத்தியிலும் மிகவும் பிரபலம். என் அம்மாகூட பல தடவைகள் இந்தக்கடையைப்பற்றிய காணொலியை யூடியூபில் பார்த்துவிட்டுச் சிலாகித்ததுண்டு. இம்முறை ஊருக்குச் சென்றபோது ஆர்த்திகனோடும் அவரது குடும்பத்தினரோடும் நெருங்கிப் பழகக்கூடிய சந்தர்ப்பம் அமைந்தது. கூடவே அவர்களது காளான் உணவுடனும். பலாலி றோட்டில், பரமேஸ்வராச்சந்திக்கும் தபால்பெட்டிச்சந்திக்கும் இடையே வீதியோரமாக இவர்களின் பெட்டிக்கடை அமைந்துள்ளது. கடையில் நின்று வியாபாரம் செய்வது ஆர்த்திகனின் தம்பியான குமரன். ஆர்த்திகனும் அவ்வப்போது அதில் இணைந்துகொள்வதுண்டு. பின்னேரங்களில் காளான் பஜ்ஜியும் சூப்பும் கட்லட்டும் விற்பார்கள். தவிரக் காளான் பிரைட் ரைஸ், காளான் டெவில் போன்றவையும் ஓர்டருக்கு விநியோகம் செய்தார்கள். யாழில் நின்ற ஒன்றரை மாதங்களில் ஐந்தாறு முறையாவது அந்த பஜ்ஜியும் சூப்பும் சாப்பிட்டிருப்போம். நாங்கள் நின்ற காலம் வேறு ஒரே அடை மழையா, பெட்டிக்கடை முன்னே நின்று மொறு மொறு பஜ்ஜியும் ஆவி பறக்கும் கார சூப்பும் உட்கொள்ளும் அனுபவமே பரவசமாக இருந்தது. யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான சுப்பர் மார்க்கட்...

புனைவின் நூதனக் களியாட்டம்

ஷாமந்தை உங்களில் சிலருக்கு ஞாபகம் இருக்கலாம். ‘என் கொல்லைப்புறத்துக் காதலிகள்’ நூலை வாசித்துவிட்டு அந்தச் சிறுவன் என்னோடு உரையாடிய காணொலியை சிலர் பார்த்திருக்கவும் கூடும்.

உள்ளக விசாரணை - අතිශය අභ්‍යන්තර පරීක්ෂණය

ஆதிரை வெளியீடாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சில தமிழ்ச் சிறுகதைகள் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதில் "சமாதானத்தின் கதை" தொகுப்பில் இடம்பெற்ற "உஷ் இது கடவுள்கள் துயிலும் தேசம்" சிறுகதையும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

குமரித்துறைவி

ஜெயமோகனின் குமரித்துறைவி நாவலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு பெரும் நிகழ்வை ஒழுங்கமைக்கும் செயலை விபரிக்கும் இச்சொற்களில் மனம் பல கணங்கள் நிலைத்து நின்றது.

"சமாதானத்தின் கதை" பற்றி அபிசாயினி

புத்தகங்களோடு அதிக நேரங்களைச் செலவளிக்காத போதிலும், புத்தகங்களோடு அதிக நேரத்தைச் செலவளிப்பவர்களோடு இந்த கொரோனா காலத்தை கடக்கவேண்டி இருந்தது…….. ஆனால், தரம் 9 ல் இருந்தே நூலகங்களுக்குப் போவது என் ப(வ)ழக்கமாய் இருந்தது . எத்தனை புத்தகங்களைப் படிந்தேன் என்பதைத் தாண்டி நிறைய நேர் அதிர்வலைகளை அந்த நூலகங்களில் சுவாசித்ததுண்டு. நிறைய மனிதர்களை ரசித்ததுண்டு . அமைதியின் ஆழம் தெரிந்ததுண்டு. அதற்கு பிறகு புத்தகங்களை வாங்குவதிலும் ஆர்வம் அதிகரித்தது. ஆனால் இப்போது முகநூலோடு என் நாட்கள் கடக்கின்றன. மனவருத்தத்திற்குரிய ஒன்றுதான் ஆனால் இந்தக் காலத்தில் புத்தகங்களை வாசிப்பதிலும், புதிய புத்தகங்களைப்பற்றி அறிமுகம் செய்வதிலும் என்னோடு இருப்பவர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படியானவர்கள் அமைவது வரம் தானே! . அவர்களோடு பேசும்போதெல்லாம் நான் இன்னமும் புத்தகங்கள் எனும் சமுத்திரத்தின் கரையில் இருப்பதாகவே உணர்கிறேன். சும்மாவா நம் முன்னோர் சொல்லிச்சென்றனர் "கற்றது கையளவு; கல்லாதது உலகளவு" என! ஏன் உங்களில் சிலர் இன்னும் 'நீ இன்னும் கரையையேகூடப் பார்க்கவில்லை' என்று முணுமுணுப்பும்...

சாமந்த் மயூரன் நேர்காணல்

சாமந்த் மயூரனுக்கு பத்துவயதுதான். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் தரம் ஆறில் கல்வி கற்கிறார். சில நாட்களுக்கு முன்னர் அவருடைய அம்மா என்னைத் தொடர்புகொண்டார். தன் மகனுக்கு ‘என் கொல்லைப்புறத்துக் காதலிகள்’ நூலை வாசிக்கக்கொடுத்ததாகச் சொன்னார். சாமந்துக்கு புத்தகம் நன்றாகப் பிடித்துப்போனதில் என்னோடு பேசவேண்டுமென்று மகன் கேட்டதாகவும் குறிப்பிட்டார். அடுத்தநாளே சூமில் நாங்களிருவரும் உரையாடல் ஒன்றைச் செய்தோம். சூம் மீட்டிங்கை ஒருங்கமைத்து, லிங் அனுப்பி, ரெக்கோர்டிங்கையும் செய்து, வீடியோவையும் அனுப்பிவைத்தது சாமந்த்தான். சாமந்தின் இப்பகிர்வு என் எழுத்துக்குக் கிடைத்த ஆகச்சிறந்த வாசிப்பனுபவமாக அமைந்திருந்தது. சாமந்த் போன்றவர்கள்தான் என் அடுத்த வரிகளுக்கான நம்பிக்கைகளையும் ஊக்கங்களையும் விதைப்பவர்கள். நம் நாட்களை அழகாக்குபவர்கள்.