அண்மைக்கால பொங்கல் நிகழ்வுகளில் அவதானித்த சில விசயங்கள். பொங்கல் அரசியலாக்கப்பட்டுவருகிறது. இது தமிழர்களுக்கான நிகழ்வு, இது ஒரு மத நிகழ்வு அல்ல என்ற வாதம் வலியுறுத்தப்படுகிறது. எனக்கு மிகவும் நெருக்கமான பாடும்மீன் சிறிஸ்கந்தராசா அண்ணா இதுபற்றி விரிவாக எழுதி பொங்கலுக்கு மத அடையாளம் சூட்டுவதை கடுமையாக எதிர்த்திருந்தார். எனக்கு இந்த விசயத்தில் சின்னக் கருத்துவேறுபாடு உண்டு. பொங்கல் ஒரு மண் சார்ந்த நிகழ்வு. அது ஒரு மதத்தின் போதனைகளிலிருந்து உருவானதல்ல. வேதங்களோ விவிலியமோ பொங்கலை நமக்கு அறிமுகம் செய்யவில்லை. உண்மைதான். மாற்றுக்கருத்து இல்லை. நாம் உழுதுண்டு வாழ்ந்த மண்ணில் இயற்கைக்கு உழவரும் மற்றவரும் நன்றி செலுத்துமுகமாகக் கொண்டாடப்படும் நிகழ்வு இது. அந்த நன்றி செலுத்தும் நிகழ்வு அவரவர் வாழ்வியலை அடிப்படையாகக்கொண்டு அமைந்திருக்கும். இயற்கையின் இருப்பான சூரியனுக்கு நன்றி செலுத்தி அதற்குப் புற்கை படைக்கும் புள்ளியிலேயே இயற்கையை இறைக்கு நாம் ஒப்பிட ஆரம்பித்துவிடுகிறோம். அந்த நிலையில் இயற்கையோடு சேர்த்து நாம் நம்பும் ஏனைய இறைகளுக்கும் துதி பாடுவதில் தவறு இல்லை என்றே படுகிறது. அது வீட்டின் கொல்ல