நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரே நாளில் 110 பக்கங்கள் வரை ஒரே நூலைப் படித்திருக்கின்றேன். “சமாதானத்தின் கதை" - தற்போது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜெயக்குமரன் சந்திரசேகரம் என்ற ஜேகே எழுதிய சிறுகதைத் தொகுப்பு. பதினொரு சிறுகதைகள். 224 பக்கங்கள். ஆதிரை வெளியீடு, புத்தகத்தைப் பதிப்பித்திருக்கிறது. இந்த நூலிலுள்ள 'கனகரத்தினம் மாஸ்ரர்' மற்றும் 'சமாதானத்தின் கதை' ஆகிய கதைகள் எனக்கு மிகவும் நன்றாகப் பிடித்திருந்தன. படலை.கொம் என்ற இணையத்தளத்தில் எழுதிவரும் ஜே.கே, இந்த நூலின் மூலம் ஈழத்துச் சிறுகதையுலகின் சிறந்த கதைசொல்லிகளில் ஒருவராகத் தன்னை ஆழமாகப் பதித்துள்ளார்.