Skip to main content

Posts

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் - படலையில் மறுபடியும்

குவாண்டம் விஞ்ஞானத்தில் 'Super Position' என்றொரு வஸ்து இருக்கிறது. ஷிரோடிங்கரின் பூனையை சிலர் கேள்விப்பட்டிருக்கக்கூடும். ஒரு மூடிய கறுப்புப் பெட்டிக்குள் இருக்கின்ற பூனையின் நிலை அது. அது உயிரோடு இருக்கிறதா, இறந்துவிட்டதா, காது குடைகிறதா, காலிடுக்கை சொறிகிறதா என்று வெளியிலிருக்கும் எவருக்கும் தெரியாது. பெட்டி மூடிக்கிடக்கையில் உள்ளே அது எல்லாமுமாக இருக்கிறது. எல்லாவற்றையும் செய்கிறது. எல்லாவற்றையும் செய்யாமலும் இருக்கிறது. அதனைத்தான் 'Super Position' என்பார்கள். நாம் பெட்டியைத் திறந்து அதனைப் பார்க்கும் கணத்தில் அதன் நிலை ஒருப்படுகிறது. நான் அதனைப் பார்ப்பதாலேயே அதனுடைய 'Super Position' நிலை மாறி 'Solid State' நிலையை அடைகிறது. நடைமுறை யதார்த்தத்தில் பெட்டிக்குள் பூனையை அடைத்துவைத்தால் மூச்சுக்காற்று இன்றி அது இறந்துவிடும் என்பீர்களானால், fine, move on. வெள்ளி நாவல் வெளியீட்டோடு ஒரு முடிவை எடுத்திருந்தேன். இனிமேல் ஒரு அன்றாடங்காய்ச்சியாட்டம் முகநூலில் எழுதுவதில்லை என்று. தற்போது நான் எழுதிக்கொண்டிருக்கும் சமகால நாவல் ஒன்று ஒரு வருட காலமாக இழுபடுகிறது. அத

லாஹிரியைச் சந்தித்தல்

ஜூம்பா லாகிரியை நேரிலே பார்க்கப்போகிறேன் என்ற பரவசம் காலையிலேயே ஆரம்பித்துவிட்டது .  

‘வெள்ளி’ நாவல் பற்றி ராஜா கருப்பையா

பள்ளி நாட்களில் தமிழ் செய்யுள் பாடத்தில் எந்த குறுந்தொகை பாடல் படித்தோம் என்பது நினைவில் இல்லை. வருடங்கள் பல கடந்த பின்பு 2011ம் ஆண்டில் திரு. சுஜாதா அவர்களின் ‘401 காதல் கவிதைகள், குறுந்தொகை ஓர் எளிய அறிமுகம்’ எனும் உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்த புத்தகம் வாசிக்க கிடைத்தது. திரு. சுஜாதா அவர்களின் ஆகச் சுவையான முன்னுரை குறுந்தொகை பாடல்களின் அறிமுகத்தை மட்டுமின்றி அவற்றை வாசிக்கும் ஆவலையும் தூண்டியிருந்தது. பாடல் புரியாவிட்டாலும்,பொருள் விளக்கம் அப்பாடல்களை வாசிக்க செய்கின்றது. திரு. சுஜாதா அவர்கள் தன்னுடைய முன்னுரையில் தமிழ் தாத்தா உ.வே.சா அவர்களுக்கு மிகப்பெரிய நன்றியை உரித்தாக்குகிறார். ஏனெனில் அவர் பதிப்பித்த உரை இல்லாவிட்டால் நாம் குறுந்தொகையை இழந்திருப்போம் என்கிறார்.

தீண்டாய் மெய் தீண்டாய் : மயிலான்

“புஞ்சிரி தஞ்சி கொஞ்சிக்கோ. முந்திரி முத்தொளி சிந்திக்கோ, மொஞ்சனி வர்ண சுந்தரி வாவே. தாங்குனக்க தகதிமியாடும் தங்க நிலாவே. தங்க கொலுசல்லே குருகும் குயிலல்லே மாறன மயிலல்லே”

பர்தா : உடைவழி அதிகாரம்

மாஜிதா எழுதிய பர்தா நாவலின் ஆரம்ப அத்தியாயத்திலிருக்கும் வரிகள் இவை. “ஆண்களாகிய நீங்கள்தான் புர்கா அணிவதைத் தீர்மானித்தீர்கள். ஆண்களாகிய நீங்கள்தான் யுத்தங்களின் ஆயுதங்களாகவும் இருக்கிறீர்கள். இப்போது புர்காவைக் கழற்றுமாறும் நீங்களே கூறுகிறீர்கள். உங்களுடைய பயங்கரவாதம், தீவிரவாதம் எல்லாவற்றையும் ஏன் பெண்களாகிய எங்களது உடலில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறீர்கள்?” இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் மாவடியூர் கிராமத்தைச் சேர்ந்த சுரையா என்கின்ற பெண்ணின் வாழ்க்கைதான் இந்நாவல். சிறுமியான சுரையா வளர்ந்து, பெரியவளாகி, மணம் முடித்து, குழந்தைகள் பெற்றுக்கொண்ட பின்னருங்கூட, உடை ஒரு கலாசாரமாக, அரசியலாக, அதிகாரமாக எப்படித் தொடர்ச்சியாக அவளது வாழ்வில் திணிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது என்பதை மிகத் தீவிரமாகவும் கருத்தியல் நேர்த்தியுடனும் சொல்லுகின்ற நாவல் பர்தா. மாவடியூரில் பெருநாள் கொண்டாட்டம். அதற்காக மிரியாகமவுக்கு பணிமாற்றம் கிடைத்துப் போயிருந்த ஹயாத்து லெப்பையின் குடும்பம் ஊர் திரும்புகிறது. பெருநாளுக்கென்று ஹயாத்து லெப்பையின் மனைவியான பீவி கிளியோப்பற்றா சேலை அணிந்திருக்கிறார். கண்ணாடி

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட

நாராய் நாராய்

வெள்ளி நாவல் அறிமுக நிகழ்வில் அரங்கேறிய இரண்டாவது சங்க இலக்கியப்பாடல். பிரிவுத்துயர் இல்லாத சங்க இலக்கியப் புனைவுக்கு இடமேது? வெள்ளி நாவலின் முக்கிய கட்டமொன்றில் பிரிவுத்துயருக்கான அத்தியாயமொன்று சாத்தியமானது. குறுந்தொகையில் ஏராளம் பிரிவுத்துயர் பாடல்கள் உண்டு. ஆனாலும் கடைச்சங்கப் பாடலான ‘நாராய் நாராய்’ வெள்ளியின் மனநிலைக்கு மிகவும் பொருந்திப்போனதாய் எனக்குத் தோன்றியது. இதை எழுதியது யாரென்று தெரியாததால் பாடலில் வருகின்ற சத்திமுத்த வாவியின் நிமித்தம் எழுதியவர் சத்திமுத்தப் புலவர் என அழைக்கப்படுகிறார். ஜீவிகாவும் ஸம்ரக்‌ஷணாவும் கேதாவும் இப்பாடலை எடுத்து அரங்கேற்றியதும், இயலும் இசையும் நாட்டியமும் மூன்று வகை படிமங்களை எடுத்தாண்டதும் மிக மன மகிழ்வைக் கொடுத்தது. கருத்துருவாக்கமும் நடன அமைப்பும் - ஜீவிகா விவேகானந்தன் இசையமைப்பும் பாட்டும் - ஸம்ரக்‌ஷணா பொருளும் நயப்பும் - கேதா காணொளியாக்கம் - வசந்த் நாராய் நாராய் செங்கால் நாராய் பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய் செங்கால் நாராய் நீயுநின் பெடையும் தென்றிசைக் குமரியாடி வடதிசைக்கேகுவீராயின் எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி நனைச