Skip to main content

Posts

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. குட்டியன்

தொ ண்ணூறுகளில் சங்கக்கடை நிவாரண அட்டை என்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தார்கள் . அ , உ , இ என மூன்று வகையான அட்டைகள் . எங்கள் வீட்டுக்கு ‘ உ ’ அட்டை . அரசாங்க உத்தியோகத்தர் என்றால் பீயோனாக இருந்தாலும் ‘ உ ’ அட்டைதான் . நிவாரணத்தில் ‘ உ ’ அட்டைக்காரருக்குப் பங்கீட்டு அளவு அரைவாசியாகக் குறையும் . அரைப்போத்தல் மண்ணெண்ணெய் , அரைக் கிலோ பருப்பு , அரைக் கிலோ சீனி என்று எல்லாமே அரையில்தான் கிடைக்கும் . அதற்கே கோப்பிரட்டி மனேஜரிடம் பல்லிளிக்க வேண்டும் . குறைந்த சம்பளம் , அதிக சம்பளம் என்ற கதை பேச்சுக்கு இடமில்லை .   காரணம் கவுன்மேந்து உத்தியோகம் .

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 5. யாழ்ப்பாணத்துக் கிரிக்கட்

  இ ன்னும் ஐந்து ரன்கள் அடித்தால் வெற்றி .   நன்றாக இருட்டிவிட்டது .   தீயிடப்பட்டு நிர்மூலம் ஆக்கப்பட்டிருந்தாலும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் யாழ் நூலகத்துக்குப் பின்னாலே சூரியன் மறைந்து கொண்டிருந்தது . எங்கே வெளிச்சம் இல்லை என்று சொல்லி ஆட்டத்தை நிறுத்தி விடுவார்களோ என்ற பயம் எங்களுக்கு . மணிக்கூண்டுக் கோபுர முனையில் இருந்து பிரபா அண்ணா பந்துவீசத் தயாராகிறார் . பூங்கா முனையில் எதிர்கொள்வது காண்டீபன் அண்ணா . மொத்த மைதானமுமே ஆர்ப்பரிக்கிறது . பந்து மட்டிங் பிட்ச்சில் லெந்தில் விழ , காண்டீபன் அண்ணா லோங் ஓனில் இழுத்து அடிக்க , விர்ர் … ரென்று பந்து பறக்கிறது . அத்தனை பேரும் ஆவென்று வாய் பிளந்து பார்க்க , அது மைதானத்தைத் தாண்டி , வீதியைத் தாண்டி , மணிக்கூண்டு கோபுரத்தின் உச்சியில் இருந்த சேவல் கொண்டையில் பட்டு .  

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 4. அரோகரா

“ பி டிச்சிட்டன் ” குமரன் சொன்னதைக் கேட்ட கீர்த்தி ‘ எங்கடா ? ’ என்று திரும்ப எத்தனிக்கிறான் .

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 3. கம்பவாரிதி

  “ ம னப்போராட்டம் நிறைந்த யதார்த்த மானுடம் பெரிதும் வெளிப்படுவது கம்பனில் கைகேயிலா ? சூர்ப்பனகையிலா ? மண்டோதரியிலா ? ”

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 2. கடவுள்

  நி த்தியகல்யாணியில் தேடித்தேடிப் பூ ஆயும் அதிகாலை . மதிலுக்கு மேலாக வளர்ந்து நிற்கும் மரக்கொப்பை , ஆட்டுக்குக் குழை குத்தும் கம்பியால் எட்டிப்பிடித்து , கொளுவி வளைக்கும்போது , சொட்டுச் சொட்டாக கொஞ்சம் பனித்துளி , தலை , முகம் , கழுத்தடி எல்லாம் விழுந்து உடம்பு சில்லிடும் . திருவிழாவில் வாங்கிய சின்னப் பனை ஒலைப்பெட்டியில் , மொட்டுத் தவிர்த்து , பூக்களைப் பிடுங்கிப் போட்டவாறு செவ்வரத்தைக்குத் தாவுகிறேன் . ஒரே மரத்தில் எத்தனை வகைப் பூக்கள் ? அதில் ஐந்தாறை மடக் மடக்கென்று ஒடித்துப் போடுகிறேன் . தோட்டத்தில் நின்ற கனகாம்பரம் , ரோசா , கடதாசிப்பூ மரங்களில் கை வைப்பதில்லை . பேப்பர் பூ சாமிக்கு வைக்கக்கூடாது . கனகாம்பரம் கலியாண வீடு , சாமத்திய வீடு ஏதும் வந்தால் கொண்டைக்குத் தேவை . ரோசாப்பூவைப் பிடுங்கினால் அம்மா திட்டுவார் .   அது விசிட்டர்ஸ் வந்தால் மணிக்கணக்கில் போறாமைப்படுவதற்கு . பொறாமைப்படுவார்கள் .

"வெள்ளி" நாவல் பற்றி எழுத்தாளர் லெ. முருகபூபதி

அவுஸ்திரேலியாவில் மெல்பனில் வதியும் ஜே.கே. என்ற புனைபெயரில் இலக்கியப்பிரதிகள் எழுதிவரும் ஜெயக்குமரனின் வெள்ளி ( மாயப்புனைவு ) நாவலை அண்மையில் படித்தேன். ஜே.கே. மெல்பனில்தான் வசிக்கிறார் என்பதை  அவரது எழுத்துக்களை தொடர்ந்து படித்துவரும் வாசகர்கள் நன்கு அறிவர்.  எனினும்  ஜே.கே. என்றால், அது மறைந்துவிட்ட ஜெயகாந்தனைத்தானே குறிக்கும் என்றும்,  அவுஸ்திரேலியா எங்கே இருக்கிறது ? எனவும் கேட்கும் தமிழக வாசகர்களுக்காகவும், இந்தப்பதிவின் தொடக்கத்தில் அவ்வாறு எழுதினேன்.

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் - 1. பங்கர்

வி லாட்டு மாமரம் பட்டுப்போக ஆரம்பித்திருந்தது . மரத்தடிக்குக் கீழே இருந்த குப்பைக்கிடங்கு எரிக்கப்பட்டதால் , கரி மரத்தடி முழுதும் படர்ந்து கொப்புகளுக்கும் எட்டியிருந்தது . குப்பையை மெதுவாகக் கிளறிப்பார்த்தேன் . ஏதோ ஒரு சத்தம் . என்னடா இது ? அருகில் இருந்த அலவாங்கை எடுத்துக் கொஞ்சம் நன்றாகக் கிளற , ஒரு குரல் . தெளிவாகக் கேட்டது . மீண்டும் அலவாங்கு போட்டேன் . அட .. இது அந்தக் கிழவியின் குரல் அல்லவா . இரைக்க இரைக்கக் கவனுத்துடன் கிளறினேன் . கிழவி இன்னமும் உள்ளேயேதான் இருக்கிறதா ? குரல் இப்போது தெளிவாக கேட்டது .   “ அப்பனே .. முருகா .. பிள்ளையாரப்பா .”